செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோயில்

சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோயில் 

வருடாந்த திருவிழாவிற்கான கொடியேற்றம 25.06.2015 நடை பெற்றது.மூதூர் பிரதேசத்தில் மிகப் பழமையான கோயில்களில் இதுவும் ஒன்று.இவ் ஆலயம் பற்றி திருகோணமலை திருக்கோயில்கள் எனும் நூலில் மிகச் சிறப்பான பதிவொன்றை பண்டிதர் வடிவேல் அவர்கள் செய்துள்ளாரஇங்கு பாடப்படும் ஊஞ்சல் பாடலின் பழமையான இலக்கிய நயம் பற்றியும்,ஆலயத்தின் வரலாறு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.இவ் ஆலயம் பல நூறு வருச பழமையானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.வெருகல் முருகன் கோயிலோடு இணயாக பேசப் படக் கூடிய வரலாற்று சான்ற்கள் இவ் ஆலயத்துக்கு உள்ளன.மூதூர் பிரதேசத்தில் முதன் முதல் தேர் உற்சவம் இக் கோயிலிலேயே நடை பெற்றது.
கதிர்காம வரலாற்றோடு மிக நெருங்கிய தொடர்பு இதற்கு உண்டு.காலம் காலமாக கதிர்காம யாத்திரிகர்கள் இங்கு வந்து தங்கி செல்வது வளமை.வருகின்றவர்களுக்கு நல் உபசாரம் செய்து அனுப்புவது சேனையூர் மக்கள் தம் கடமையாக கொணிருந்தனர்.
ஒவொரு வருசமும் ஆனி உத்தரத்தில் கொடியேறி தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடை பெறும்.
முன்னய நாட்களில் ,சேனையூர்,கட்டைபறிச்சான்,கடற்கரை சேனை ,மருத நகர்,கல்லம்பார் என எல்லா பகுதியினரும் பத்து திருவிழாக்களையும் பகிர்ந்து நடத்தினர்.1ம் திருவிழா கடற்கரை சேனையினரும்,6ம் திருவிழாவினை மருத நகர் பகுதியினரும் நடத்த ஏனைய திருவிழாக்கள் குடி வழி உரிமையில் நடத்தப் பட்டன. பின்னய நாட்களில் கடற்கரை சேனையினர் 1ம் திருவிழாவிலிருந்து விலகிக் கொண்டனர்.குடி வழி உரிமைய்ள்ள பலரும் பல திரிவிழாக்களிலிருந்து விலகிக் கொள்ள இப்போது ஆதிக் குடி வழி முறமையுள்ளவர்கள் திரு விழாக்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
என் இளமைக் கால கலை ஆர்வம் இந்த திருவிழாக்களிலேயே கருக் கொண்டது.ஒவொரு திரு விழாக் காரரும் போட்டி போட்டுக் கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.யாழ்ப்பாணத்திலிருந்து சின்ன மேளம்,ஈழத்து சவுந்தரராஜன்,நாச்சிமார் கோயிலடி பெண்கள் மேளம்,நடிக மணி வையிரமுத்துவின் நாடகங்கள்,மட்டக்களப்பு கூத்துக்கள்,
என் ஆசையப்புவின் வில்லுப் பாட்டு,கட்டைபறிச்சான் கலை வாணி இசைக் கழகம் ,கட்டைபறிச்சான் சிறி முருகன் இசைக் கழகம்,சம்பூர் வினாயகா இசை கழகம், என எத்தனை நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்.

No comments:

Post a Comment