செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரும் கொம்பு விளையாட்டும்



சேனையூரும் கொம்பு விளையாட்டும்

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொன்று விசேசமாக இருக்கும் பள்ளிக் குடியிருப்பு கிராமத்தின் பண்டய பாரம்பரியமாக கொம்பு விளையாட்டு விளங்குகிறது.அன்றய நாட்களில் சேனையூர் கிராமமும் ஒரு பங்கு தாரராக இந்த நிகழ்வில் இணந்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
கிழக்கு மாகாணத்தில் கண்ணகி வழிபாடாடோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டதாக கொம்பு முறி அல்லது கொம்பு விளையாட்டு அமைகிறது.ஈழத்தமிழர் மத்தியில் குறிப்பாக கிழக்கு மாகாண தமிழர்களுக்கு சொந்தமான தனித்துவ அடையாளம். 
கண்ணகிக்கு சடங்கு செய்வதும் கொம்பு விளையாடுவதும்கண்ணகியின் கோபத்தை தணித்து சாந்தத்தை ஏர்ப்படுத்தும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது.
மதுரையயை எரித்த கண்ணகியின் சீற்றம் தணியவில்லை .கோபத்துடனேயே கண்ணகி இடையர் சேரி செண்ற போது இடையர்கள் கண்ணகியின் சீற்றத்தை தணிக்க பல முயற்சிகள் செய்தனர் பலிக்கவில்லை.அப்போது அங்குள்ள இடை ச் சிறுவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து மஞ்சள் கொம்புகள் இரண்டெடுத்து ஒன்றோடு ஒன்று கொழுவி இழுத்தனர்,ஒரு கொம்பு முறிய மறு கொம்பு வெண்றதுவென்ற கொம்புக்கு உரியவர்கள் அது கண்ணகியின் கொம்பு என ஆடிப் பாடி மகிழ்ந்தனர்இதைக் கண்ட கண்ணகி கோபம் தணிந்து குழிர்ந்ததாக சொல்லப்படுகிறது

No comments:

Post a Comment