செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-12 பூசணிக்காய் விளையாட்டு

சேனையூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-12
பூசணிக்காய் விளையாட்டு
பொதுவாக சிறுவர்களிடையேபூசணிக்காய் விளையாட்டு என்று அழைக்கப்படும் இவ்விளையாட்டானது.
சிறுவர் ஒருவர் : டொக் டொக்
சிறுவர்கள் : யார் வந்த
சிறுவர் ஒருவர் : அரசன் வந்த
சிறுவர்கள் : எனக்குக் குத்து
சிறுவர் ஒருவர் : கொக்குக்கும் குருவிக்கும் கல்யாணமாம் இரண்டு சுரக்காய் தரட்டாம்
சிறுவர்கள் : இப்பதான் நாட்டி இருக்கு
இதனை பொன்றே இரண்டாவது தடவையும்
சிறுவர் ஒருவர் : டொக் டொக்
சிறுவர்கள் : யார் வந்த
சிறுவர் ஒருவர் : அரசன் வந்த
சிறுவர்கள் : என்னத்துக்கு
சிறுவர் ஒருவர் : கொக்குக்கும் குருவிக்கும் கல்யாணமாம் இரண்டு சுரக்காய் தரட்டாம்.
சிறுவர்கள் : இப்பதான் கொழுந்து விட்டிருக்கு.
என்றவாறு பலமுறை இப்பதான் பூத்திருக்கு, இப்பதான் காய்த்திருக்கு சிட்டிப் பார்த்து ஆய்ந்துட்டுப் போ என்றவுடன் குறிப்பிட ஒருவர் குந்தி இருக்கும் சிறுவர்களின் தலைமீது குட்டுவர். முத்தியிருந்தால் ‘டொங் டொங்’ என சத்தம் கேட்போம் என்று சொல்லி விளையாடுவர்.
இந்த விளையாட்டு வீட்டின் முன் உள்ள மரத்தூண் ஒன்றின் முன்னிருந்து அல்லது மரத்தடியில் இருந்து கொண்டு ஒரு சிறுவரின் கயிற்றை மற்றச் சிறுவர்கள் இறுக்கிப் பிடித்துக் கொள்வர். இவ்வாறு நான்கு அல்லது ஐந்து பேர் தமக்கு முன்னால் இருப்பவரின் வயிற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வர்.
குறிப்பிட்ட ஒரு சிறுவர் அந்த வரிசையின் பின்னால் இருப்பவரை முதலில் இழுத்து வெளியே எடுப்பார். பூசணிக்காய்கொடியிலிருந்து ஒவ்வொரு பூசணிக்காய் ஆய்வதனை அல்லது புடுங்குவதனைக் கற்பனை செய்துகொள்வர்.
இந்த விளையாட்டு மிகவும் மகிழ்ச்சிகரமானது, ஆயினும் இன்றைய நிலையில் இதுகூட அருகிப் போய்விட்டது

No comments:

Post a Comment