செய்திகள்,வரலாறு,பண்பாடு

Friday 14 August 2015

சேனையூரின் பொருளாதாரம்-1

சேனையூரின் பொருளாதாரம்-1
சேனையூர் மக்கள் பண்டைக் காலம் தொட்டு இன்றுவரை முக்கிய தொழிலாக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.குளங்களும் குளங்களோடு அண்டிய வயல் வெளிகளும் நெல் வேளாண்மைக்கு ஆதாரமாக அமைய.சேனைச் செய்கை .தோட்ட செய்கை என விரிவடைந்துள்ளது.சேனையூர் மக்கள் கொட்டியாரப் பிரதேசத்தின் எல்லாப் பகுதிகளிலும் தங்களுக்கான விவசாய நிலங்களை கொண்டுள்ளனர்.கயமொந்தான்,பத்தி குடுப்பு,கிணாந்தி முனை,இறையாத்து வெளி,சந்தணவெட்டு,பள்ளிக்குடியிருப்பை அண்டிய பிரம்பு வெளி,குறவன் பட்டவன்,சோலைப்பள்ளம் ,பட்டியடிக்குடா,பெருவெளி என்பனவும்.
செனையூருக்கு கிழக்கே ஆனக்கல் வெளி,சீதன வெளி ,கிளல் வெளி,நய்யந்த,கணங்குடா,இளக்கந்த வெளி,பூவரசக் குடா,சோலைப்பள்ளம் என அடையாளமிட முடியும்.
இந்த பிரத்ர்சங்களை அண்டி உப பயிற்செய்கைக்கான சேனை நிலங்களும் இவர்களுக்கு சொந்தமாக உள்ளது.
நெல் செய்கையயை பிரதானமாக கொண்டாலும் சேனை செய்கைக்குரிய மரவள்ளி சோழன் எனபனவும் ,கடந்த முப்பது ஆண்டுகளில் உப உணவு பயிற் செய்கயிலும் முன்னணி வகிக்கிறது.இந்த வகையில் சேனையூருக்கு குட்டி யாழ்ப்பாணம் என்ற பெயரும் உண்டு.
சேனையூர் மக்கள் உழைப்பும் முயற்சியும் உடையவர்கள்.


No comments:

Post a Comment