செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

சேனையூர் வரலாறு -13 சேனையூர் செப்பேடு


சேனையூர் வரலாறு -13
சேனையூர் செப்பேடு
''செப்பேடுகள் என்பவை பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவளி[1] , போர்க்குறிப்புகள், மரபு வழிக்கதைகள் போன்ற நிகழ்வுகளைப் பதிந்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகத்(செப்புத்) தகடு ஆகும். இவை தற்காலத்தில் பழங்காலத்தைப் பற்றி அறியும் தொல்லியல் சான்றுகளாக இருந்து வருகின்றன.''
இது செப்பேடுகள் பற்றி விக்கி பீடியா தருகின்ற தகவல்.சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் ஆலயம் அதற்கான கொடைகள் கொடுத்ததற்கான முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னானான செப்புப்பட்டயம் முக்கியமான ஒன்று .பொன்னாச்சியார் என்பவர் அந்த பட்டயத்தில் தான் நிவந்தமாக பல பொருட்களையும் காணியயயும் கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இலங்கை வரலாற்றில் செப்பேடுகள் மிக குறைவாகவே கிடைத்துள்ளன .இச் செப்பேடு பற்றி பண்டிதர் ,இ.வடிவேல் அவர்கள் தனது ''திருக்கோணமலை திருக்கோயில்கள் ''என்ற நூலில் குரிப்பிட்டுள்ளார்.தான் அந்த செப்பேடுகளை பார்த்ததாகவும் சொல்லியுள்ளார்.2006ம் ஆண்டுவரை பாதுகாப்பாக இருந்த செப்பேடு இடம் பெற்ற யுத்த சூழ் நிலை காரணமாக காணமல் போனது.

No comments:

Post a Comment