செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்-6 கூழாம் பாண்டி

சேனையூரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்-6
கூழாம் பாண்டி
சேனையூரின் தனித்துவமான விளையாட்டு.சடுகுடு போலவே விளையாடும் தன்மை கொண்டது.சடுகுடு இரு அணிகளாக பிரிந்து நீள்சதுரமான ஆட்ட வெளியயை இரண்டாக பிரித்து விளையாடுவர்.ஆனால் இங்கு வட்ட வடிவான ஆட்ட வெளி அணிகள் இரண்டுதான் ஒரு அணி வட்ட ஆடல் வெளியில் நிற்க மற்றய அணி வெளியில் இருக்க ஆட்டம் தொடங்கும்.
வெளியில் இருக்கும் அணியினர் ஒவ்வொருவராக சென்று எதிர் அணியினரை ஆட்டமிழக்க செய்வர்.வெளியிலிருந்து வந்தவரை அமுக்கி மடக்கி பிடித்து எல்லைக் கோட்டை தொட்டு விடாதவாறு தடுத்து வைப்பர்.வந்தவர் எல்லைக் கோட்டை தொட்டு விட கடைசிவரை முயற்சிப்பார் தொட்டு விட்டால் தடுத்தவர்கள் அனைவரும் ஆட்டமிழப்பர்.

No comments:

Post a Comment