செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

சேனையூர் வரலாறு-9


சேனையூர் வரலாறு-9
சோழர்கால சான்றுகள்
கி.10ம் 11ம் நூற்றாண்டில் ஆசியாவில் செல்வாக்கு செலுத்திய சோழ சாம்ராஜ்ஜியம் இலங்கையிலும் தன் செல்வாக்கை செலுத்தியது.சிலர் இதனை ஆக்கிரமிப்பாளர்கள் என்று புறம் தள்ளுகின்றனர்.ஆக்கிரமிப்பாளர்களே வரலாற்றுக்கான தடங்களை விட்டு சென்றுள்ளனர்.கொட்டியார பிரதேசத்தில்சோழர் ஆட்சிக்கான சான்றுகள் நிறையவே உள்ளன.அவையே தமிழர் வாழ்வின் தொடர்ச்சியயை தருகின்றன.சேனையூரிலும் அதற்கான சான்றுகள் உள்ள்ன.சேனையூர் வீரபத்திரன் கோயிலையண்டி காணப்படும் கட்டிட இடிபடுகள்.இது சோழர் கால சிவன் கோயிலுக்கான சாயலக் கொண்டுள்ளதாக பேராசிரியர் இந்திரபாலா இவ் இடிபாடுகளை ஆய்வு செய்தபோது குறிப்பிட்டார்.பொலநறுவையில் காணப்படும் சிவன் கோயில்களின் இடிபாடுகளை ஒத்துள்ளது.கற்றூண்கள் வரலாற்றின் சாட்சிகள்.

No comments:

Post a Comment