செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

தமிழர் பண்பாட்டில் சேனையூர்-1



தமிழர் பண்பாட்டில் சேனையூர்-1
சேனையூரில் தேர்
சேனையூர் வர்ண குல பிள்ளையார்
கோயிலில் தேர்த் திருவிழா இன்று 02.07.2015 நடை பெற்றது.
"மரங்களை வைத்துத் தேர் செய்யும் மரபு தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்துள்ளது. மரத் தேர்களின் அடிப்படையில்தான் கற்தேர்கள் என்னும் ஒற்றைக்கல் ரதங்கள், பல்லவர்களால் மாமல்ல புரத்திலும், பாண்டியர்களால் கழுகு மலையிலும் அமைக்கப்பட்டன.இருப்பினும் பழங்காலத்தில் அமைக்கப்பட்ட தேர்களைக் காண முடியவில்லை. இருப்பினும் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர்கள் அக்காலத்தில் இருந்தமைக்கான செய்திகள் உள்ளன. அவை நெடுந்தேர், பொற்றேர், கொடிஞ்சி நெடுந்தேர், கொடித்தேர், அணிகொள்தேர் என்று பலவகையான பெயர்கள் தேர்களுக்கு வழங்கப்பட்டன. சிலப்பதிகாரம் புத்தக் கடவுளுக்கு என்று தேர்த்திருவிழா நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது."

No comments:

Post a Comment