செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூர் கிராம முன்னேற்ற சங்கம்

சேனையூர் கிராம முன்னேற்ற சங்கம்

இலங்கை சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களில் கிராம அபிவிருத்தி திணைக்களம் உருவாக்கப்படுகிறது.நாடெங்கிலும் கிராமங்கள் தோறும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் அமைக்கப் படுகின்றன.சேனையூரிலும் திரு.கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமையில் சேனையூர் கிராம முன்னேற்ற சங்கம் 1949ல் உதயமாகிறது.சேனையூர் கிராமத்தின் முன்னேற்றத்தில் திரு கணபதிப் பிள்ளை அவர்களின் பங்கு முக்கியமானது.எந்த அரசியல் பலமுமில்லாமல் கிராமத்தின் முன்னேற்றத்தில் டன்னலமற்ற அக்கறையுடன் செயல் பட்ட செயல் வீரன் என்று சொல்லலாம்.சில காலம் இயங்காமல் இருந்த சங்கத்தை திரு க.ஜீவரத்த்தினம் ஆசிரியர் அவர்களின் முயற்சியால் 1960களில் புனரமைப்பு செய்யப் படுகிறது.தொடர் செயல் பாடுகள் சங்கம் உயிர்ப்புள்ளதாக இயங்கியது.

No comments:

Post a Comment