செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோயில்

சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோயில் 

வருடாந்த திருவிழாவிற்கான கொடியேற்றம 25.06.2015 நடை பெற்றது.மூதூர் பிரதேசத்தில் மிகப் பழமையான கோயில்களில் இதுவும் ஒன்று.இவ் ஆலயம் பற்றி திருகோணமலை திருக்கோயில்கள் எனும் நூலில் மிகச் சிறப்பான பதிவொன்றை பண்டிதர் வடிவேல் அவர்கள் செய்துள்ளாரஇங்கு பாடப்படும் ஊஞ்சல் பாடலின் பழமையான இலக்கிய நயம் பற்றியும்,ஆலயத்தின் வரலாறு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.இவ் ஆலயம் பல நூறு வருச பழமையானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.வெருகல் முருகன் கோயிலோடு இணயாக பேசப் படக் கூடிய வரலாற்று சான்ற்கள் இவ் ஆலயத்துக்கு உள்ளன.மூதூர் பிரதேசத்தில் முதன் முதல் தேர் உற்சவம் இக் கோயிலிலேயே நடை பெற்றது.
கதிர்காம வரலாற்றோடு மிக நெருங்கிய தொடர்பு இதற்கு உண்டு.காலம் காலமாக கதிர்காம யாத்திரிகர்கள் இங்கு வந்து தங்கி செல்வது வளமை.வருகின்றவர்களுக்கு நல் உபசாரம் செய்து அனுப்புவது சேனையூர் மக்கள் தம் கடமையாக கொணிருந்தனர்.
ஒவொரு வருசமும் ஆனி உத்தரத்தில் கொடியேறி தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடை பெறும்.
முன்னய நாட்களில் ,சேனையூர்,கட்டைபறிச்சான்,கடற்கரை சேனை ,மருத நகர்,கல்லம்பார் என எல்லா பகுதியினரும் பத்து திருவிழாக்களையும் பகிர்ந்து நடத்தினர்.1ம் திருவிழா கடற்கரை சேனையினரும்,6ம் திருவிழாவினை மருத நகர் பகுதியினரும் நடத்த ஏனைய திருவிழாக்கள் குடி வழி உரிமையில் நடத்தப் பட்டன. பின்னய நாட்களில் கடற்கரை சேனையினர் 1ம் திருவிழாவிலிருந்து விலகிக் கொண்டனர்.குடி வழி உரிமைய்ள்ள பலரும் பல திரிவிழாக்களிலிருந்து விலகிக் கொள்ள இப்போது ஆதிக் குடி வழி முறமையுள்ளவர்கள் திரு விழாக்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
என் இளமைக் கால கலை ஆர்வம் இந்த திருவிழாக்களிலேயே கருக் கொண்டது.ஒவொரு திரு விழாக் காரரும் போட்டி போட்டுக் கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.யாழ்ப்பாணத்திலிருந்து சின்ன மேளம்,ஈழத்து சவுந்தரராஜன்,நாச்சிமார் கோயிலடி பெண்கள் மேளம்,நடிக மணி வையிரமுத்துவின் நாடகங்கள்,மட்டக்களப்பு கூத்துக்கள்,
என் ஆசையப்புவின் வில்லுப் பாட்டு,கட்டைபறிச்சான் கலை வாணி இசைக் கழகம் ,கட்டைபறிச்சான் சிறி முருகன் இசைக் கழகம்,சம்பூர் வினாயகா இசை கழகம், என எத்தனை நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்.

சேனையூரில் இயங்குகின்ற சமூக சங்கங்கள்.-1 சேனையூர் சிறி கணேசா சன சமூக நிலையம்

சேனையூரில் இயங்குகின்ற சமூக சங்கங்கள்.-1
சேனையூர் சிறி கணேசா சன சமூக நிலையம்
மூதூர் பகுதியில் மிக நீண்ட வரலாறு கொண்டது.1957ல்உருவாக்கப் பட்டது.வாசிக சாலை ,விளையாட்டு பொழுது போக்கு என்பனவற்றுக்கு முக்கியம் கொடுத்து இயங்கியது.
இப் பிரதேசத்தின் முதல் வாசிக சாலை இங்குதான் தொடங்கியது.தனியே வாசிக சாலையாக இல்லாமல் சமூக ஒருங்கிணைப்பு கூடமாக இயங்கியது.
இன்று நாம் பார்க்கும் செல் போன் கோபுரங்கள் போல இரண்டு பெரிய இரும்பு தூண்களில் அன்ரனா பொருத்தப் பட்டு வானொலி இயங்கியது. செய்தி கேட்பதற்காக பெருமளவில் மக்கள் கூடுவர்.
கைபந்து விளையாட்டில் அகில இலங்கை ரீதியில் புகழ் பெற்றது சேனையூர் சிறி கணேசா விளையாட்டுக் கழகம்.மிகச் சிறந்த விளையாட்டு வீரர்கள் இங்கு உருவாகினர்.
சன சமூக நிலயத்தில் ஒரு சிறிய படிப்பகம் இயங்கி வந்தது.என் இளமைக் கால வாசிப்பு இங்கிருந்தே உருவானது.
மாலை நேரங்களில் இளைஞர்கள் கூடுவர்.பத்திரிகைகள் சஞ்சிகைகள் வாசிப்பர்,கரம் செஸ் போன்ற விளையாட்டுக்கள் களை கட்டும் .கைப்பந்து விளயாடுவதற்கு ஊரின் எல்லாப் பகுதியினரும் வருவர்.சிரேஸ்ற அணி கனிஸ்ற அணி என பல அணிகள் களத்தில் இருக்கும்.பலர் பழகுவதற்காக வருவர்.அவர்களுக்கு பயிற்சி அளிக்கப் படும்.
சேனையூரில் படித்த பலரும் இந்த சன சமுக நிலயத்தில் வளர்ந்தமை குறிப்பிடத் தக்கது.நானும் எனது நண்பர்களும் இரவு நேரங்களில் இங்கு தங்கியிருந்து படித்தோம்.நான் சசீஸ்குமார்,கிருபானந்தம்,அருளனந்தம்,அரசரெட்ன மாமா ,ஜெயம் அண்ணன்,செல்வன்,நவரெட்டினம் ,இரத்தினசிங்கம் என எல்லோரும் ஒன்று கூடும் இடமாக இருந்தது.
சன சமுக நில்யத்துக்கு முன்னால் உள்ள கோயில் காணியில் சிங்கள மாமா ஒருவர் தேனீர் கடை வைத்திருந்தார்.அவரிடம் நன்னாரி தேத்தண்ணி கிடைக்கும்.
1981ல் இங்குதான் எனது தலைமையில் சேனையூர் இலக்கிய வட்டம் உருவானது.பல கருத்தரங்குகள் ,விவாத மேடைகளை நாங்கள் நடத்தினோம்.
1985ம் ஆண்டுக்கு பின்னரான சூழல் எங்கள் சன சமுக நிலயத்தையும் சூறையாடியது.1990களில் முக்கியமாக இருந்த இயக்கமொன்று சன சமுக கட்டிட கூரை தகடுகளை தங்கள் முகாம் அமைப்பதற்க்காக எடுத்து சென்று விட்டனர்.
இன்று இயக்கமின்றி ஒரு வரலாற்றின் சாட்சியாக மட்டும் காட்சியளிக்கிறது.மீண்டும் இதை உயிர்ப்புள்ள இடமாக மாற்ற சேனையூர் இளைஞர்கள் முன் வரவேண்டும்.
Like   Comment   

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-6 திருகணி(திருவணி)

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-6
திருகணி(திருவணி)
பாத்திரங்கள் நிலத்தில் படாமல் இருக்க பாதுகாப்பாக பயன்படும் ஒரு பொருள்.
கயிறு.பனம் விலார்,வைக்கல்,மரம்,களிமண் ஆகியவற்றினால் செய்யப்படும்.
ஒன்றிப்பிணைந்த ஒரு பொருள் தான் திருகணை. பொதுவாக திருகணி என்று சொல்லுவார்கள். பெரும்பாலும் பனை ஈர்க்கினால் பின்னப்பட்டதாக அல்லது தும்புக் கயிற்றினால் பின்னப்பட்டதாக இருக்கும். வீடுகளில் குறிப்பாக சமையல் அறையில் சமைக்கப்பட்ட உணவுப் பாத்திரங்களை வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும். ஆரம்ப காலங்களில் விறகைப் பயன்படுத்தியே எல்லாரும் சமையல் வேலைகளைச் செய்வார்கள். இதன் போது பாத்திரத்தில் புகைக்கரி காணப்படும். நேரடியாக பாத்திரங்களை நிலத்தில் வைத்தால் வெப்பம் மற்றும் கரியால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக அந்த திருகணை பாவிக்கப்படும். பானை, சட்டி, தாச்சி, மற்றும் சமையல் உபகரணங்களை வைப்பதற்காக பாவிக்கப்படும். சமையல் பாத்திரங்களின் அடிப்பகுதி பெரும்பாலும் வளைவாகவே காணப்படும். எனவே நேரடியாக தரையில் வைக்க முடியாது. திருகணை இதற்கு ஒரு நல்ல தீர்வாக அமைந்தது.
வீடுகளில் பெரிய பானைகள் திருகணியிலேயே அடுக்கி வைக்கப் படும்.

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-7 அகப்பை

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-7
அகப்பை
நம் சமையல் காரியங்களில் தவிர்க்க மிடியாத ஒரு சாதனம் அகப்பை.
''சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்''இது பழமொழி.''
சேனையூரில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான அகப்பை பயன் படுத்தப் பட்டது,
சோறாக்க ஒருஅகப்பை
கறிக்கு
பெரும் அமுதுக்கு
பொங்கலுக்கு
பலகாரத்துக்கு என அமையும்.
கலை நயத்துடன் செயப் பட்ட அகப்பைகளை நான் கண்டிருக்கிறேன்.என் தகப்பனார் அகப்பை செய்வதை பார்த்திருக்கிறேன்.
தேங்காய் சிரட்டைகளை செருக்கி துளை போட்டு .பின் மரத்திலான காம்பை செருகுகிறபோது அகப்பை முழுமை பெறும்.அனேகமாக அகப்பை காம்புக்கு சமுள மரமே பயன் படுத்தப் படும்.

சேனையூர் கிராமிய வைத்தியசாலை

சேனையூர் கிராமிய வைத்தியசாலை
1948 இலங்கை சுதந்திரத்திற்கு பின்பு, இலங்கையில் சுகாதாரத் துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது என்று சொல்லலாம்.அதனடிப்படையில் கிராமங்கள் தோறும் கிராமிய வைத்திய சாலைகள் அமைக்கப்பட்டன.மூதூர் கிழக்கில் இரண்டு இடங்களில் இந்த வைத்தியசாலைகள் ஒன்று சேனையூரிலும் மற்றது சம்பூரிலும் அமைக்கப் பட்டது.வாரத்திற்கு ஒருமுறை வைத்தியர் ஒருவர் வந்து மருந்து கொடுத்து செல்வது வழக்கமாக இருந்தது.ஆனால் 70களில் இந்த நிலமை முற்றாக நிறுத்தப் பட்டது.அந்த கட்டிடமும் இன்று முற்றாக இடிந்து அழிந்து விட்டது.
2011ல் மீண்டும் நிரந்தரமான கிராமிய வைத்தியசாலைஅமைக்கப் பட்டுள்ளது.இன்று அது சிறப்பாக இயங்கி வருகிறது.

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-8 கத்தி வகைகள்

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-8
கத்தி வகைகள்
சேனையூரில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோரு விதமான கத்தி பாவிக்கப் படுகிறது.
வெட்டுக் கத்தி
காடு வெட்டுவதற்கும் பெரிய வேலைகள் செய்வதற்கும் இதனை பயன் படுத்துவர்.
பாறாங் கத்தி
சின்ன வேலைகள் செய்வதற்கு ,தேங்காய் உரிக்க மற்றும் வீட்டில் உள்ள வேலைகளுக்கு பயன்படும்.
தாக்கத்தி
வேளாண்மை வெட்டுக்கு பயன் படுத்தப் படுகிறது.இலங்கையில் வேறு பகுதியில் உள்ள தாக்கத்திக்கும் இங்குள்ள கத்திக்கும் வேறுபாடு உண்டு.

சேனையூரும் மாட்டு வண்டிலும்

சேனையூரும் மாட்டு வண்டிலும்
சேனையூரில் மாட்டு வண்டிலின் பயன்பாடு இன்றுவரை உயிர்ப்புளதாகவே உள்ளது.அன்றய நாட்களில் அனேகமாக எல்லோர் வீடுகளிலும் நாம் வண்டில் மாடுகளை பார்க்கலாம்.மாட்டுமால் அதனோடிணைந்த வைக்கல் போர்.எத்தனை அழகு.
2006ம் ஆண்டு ஏற்பட்ட இடப் பெயர்வு பலரது வண்டில் மாடுகளை காவுகொண்டு விட்டது.மீண்டும் தற்போது அதனை படிப்படியாக மீளுருவாக்கியிருக்கிறார்கள்.வண்டில் மாடுகளே விவசாயத்துக்கான ஆதாரமாக பெரிதும் பயன் பட்டன.
முன்னய நாட்களில் தூரப் பயணங்களுக்கு வண்டில் மாடே பெரிதும் பயன் பட்டது.மூதூருக்கு தோப்பூருக்கு படம் பார்க்க செல்வது வண்டில் மாட்டிலேயே.இரவு நேரம் மூக்கணைக்கு நடுவே அரிக்கன் லாம்பு கட்டி செல்லும் பயணம் அலாதியானது.
வண்டில் செய்கின்ற போது ஒவொன்றுக்கும் ஒவ்வொரு வகை மரத்தின் பயன்பாடு. நடுப் பாருக்கு சமுள மரம்.மூக்கணைக்கு விண்ணங்கு,சிலாகைகளுக்கு குயில மரம்,அச்சுக்கு முதிரமரம்,பக்கப் பார்களுக்கும் இலகுவான பாரம் குறைந்த மரங்கள் என தெரிவு செய்வர்.
சேனையூர் வண்டில்களுக்கு தூரப் பயணங்களுக்காக கூடாரம் அமைக்கப் படும் அது அழகான சிறிய வீடுபோல இருக்கும்.அவ்வளவு அழகான அதன் வடிவமைப்பு.
Like   Comment   

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-1 கானாந்தி இலக்கறி

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-1
கானாந்தி இலக்கறி
கானாந்தி கீரை கிழக்கு மாகாணக் காடுகளில் ,வயல்களை குளங்களை அண்டிய காடுகளில் இது குறிப்பாக ஆரப்பத்தை எனப்படும் காட்டு வெள்ளம் வழிந்தோடும் பகுதிகளில் செழிப்பாக வளரும்.மழை காலங்களில் துளிர் விட்டு வளர்ந்து காய்த்து பழுக்கும்.வன்னி காடுகளிலும் இருக்க கூடும்.
எங்கள் சேனையூரில் இது மிகுதியாக கிடைக்கும்.நாங்கள் வயல் செய்யும் காலங்களில் அப்புச்சியோடு போகும் போது எங்கள் குளத்து சேனை வயலுக்கு பக்கத்தில் நிறயவே ஆய்ந்து வருவோம்.
வேறு எந்த கீரையிலும் இல்லாத தனிச் சுவை இதிலுண்டு.
கானாந்தியில் மூன்று வகையான கறி வைக்கலாம்.
கானாந்தி சொதி
கானாந்தியும் சிறிய மீன்கள் காரல்,கீரி,திரளி என்பனவும் மாங்காயும் சேர்ந்த சமையல்
கானாந்தி வெள்ளக் கறி
கானாந்தியும் இறாலும் மாங்காயும் போட்டு காய்ச்சும் கறி எலுமிச்சம் புளியும் விடலாம்
கானாந்தி கடையல்
கானாந்தியும் மாங்காயும் போட்டு கடைதல்
எங்கள் வீட்டிலும் ஒரு கானாந்தி மரம் இருந்தது .அதனால் நாங்கள் வருசம் முழுவதும் கானாந்தி கறி சாப்பிடுவோம்.
Like   Comment   

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-2 ஆரல் இலக்கறி

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-2
ஆரல் இலக்கறி
சேனையூரின் வயல் பிரதேசங்களில் கிடைக்கக் கூடியது .வயல் வாய்க்கால் ஒரங்களிலும் குளக் கரைகளிலும் இது வளரும் .தாமரையயை போல தண்ணீரிலேயே இது படர்ந்து இருக்கும் .விரல்களால் கோலி இதனை எடுக்க வேண்டும்.கிட்டத்தட்ட ஆகாயத் தாமரை போன்றது ,ஆகாயத் தாமரை இதழ்கள் அடுக்காக இருக்கும் ,ஆனால் ஆரல் இலைகள் தனி இதழ்களாக இருக்கும்.
ஆரல்ஆணம் (சொதி)
களனித் தண்ணியும் சின்ன இறாலும் போட்டு சமைக்க நல்ல சுவையயிருக்கும்.களனி தண்ணி என்பது சிகப்பு பச்சரிசி கழுவிய தண்ணி.தேங்காய் பால் விட்டு காய்ச்சுவது பொதுவான நடை முறை.
ஆரல் அவியல்
தேங்கஈய் பால் ஆரல் இலக்கறி எதவது ஒரு மணப்பு மீனோ இறாலோ போடலாம்
தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்
பொன்றாத நீரிழிவைப் புண்ணீரை -யென்றுமிந்த
ஆராரைச் சாராம லோட்டிவிடு நாலிதழால்
நீராரைக் கீரையது நீ
என (அகத்தியர் குணவாகடம்) கூறும்