செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரும் கதிர்காம கலசாரமும்.

சேனையூரும் கதிர்காம கலசாரமும்.
சேனையூருக்கும் கதிர்காமத்திற்குமானகலாசார தொடர்பு பண்டைக் காலம் தொட்டு இருந்து வந்துள்ளது.கதிர்காம பாத யாத்திரை மேற்கொள்பவர்கள் சேனையூருக்கு வந்து செல்வது வழமை.
கதிர்காமத்திற்கு கால் நடையாக செல்வதே,தொன்று தொட்டு வரும் மரபாக இருந்தது.ஒவ்வொரு வருசமும் பலர் ஒன்றிணந்து இந்த யாத்திரையயை மேற்கொள்வர்.கதிர்காம திருவிழாவுக்கு ஒரிரு மாதங்களுக்கு முன்பே யாத்திரை தொடங்கும்.அன்றய நாட்களில் கதிர்காமம் செல்வோர் சொத்துக்களை பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்து விட்டுசெல்வார்களாம்.
கதிர்காம யாத்திரைக்கு செல்வதானால் பெருமளவில் ஆயத்தங்கள் நடக்கும்.யாத்திரை போவோர் அதற்கான சாப்ப்பாட்டு பொருட்களை தயார் செய்வர்,பொரி விளாங்காய்,சீனிமா,அவல் ,எள்ளுருண்டை.பழுது படாத பலகாரங்கள் என பயணத்தில் சாப்பிடக் கூடிய பொருட்கள்.
நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிடக் கூடிய உணவுகளை தயாரிக்கும் தொழில் நுட்பம் சேனையூர் மக்களிடம் தொன்று தொட்டு நிலவி வந்துள்ளது.கதிர்காம யாத்திரைக்கு மட்டுமல்ல,வயல் வேலைக்கு நீண்ட நாட்கள் தங்கும் போதும் இந்த சாப்பாட்டு முறை பயன் படுகிறது.
கதிர்காம தீர்த்தம் முடிந்து வந்தவுடன் அவரவர் வீடுகளில் அமுது கொடுக்கப் படும் .முன்னர் போய் வந்தவர்களும் அமுது கொடுப்பர்.எங்கள் உரில் அமுது என்பது பல மரக்கறிகளுடன் மற்றவர்களுக்கு சாப்பாடு கொடுப்பது.பழந்தமிழர் மரபில் அமுது படைத்தல் வழக்கம் இருந்து வந்துள்ளது.

No comments:

Post a Comment