செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்- 5 உறி

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்- 5
உறி
கயிறால் அல்லது நாரினால் பின்னப்பட்ட பொருள்தான் உறி. பானைகளில் சமைத்த பொருட்களை தூக்கி வைப்பதற்கு உறிகள் பயன்பட்டன. இப்போது சமைத்த உணவை எடுத்து வைக்க தயிர், மோர், பால், இனிப்பு போன்ற உணவுப்பொருட்களை பாதுகாக்க சேனையூர் மக்கள் உறிகளைத்தான் பெரிதும் நம்பி இருந்தனர். 
உறி தலைக்கும் இடிக்காமல், கைக்கு எட்டும் உயரத்தில் வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும். ஊரில் வீடுகள் எப்போதும் திறந்தே இருக்கும். வீட்டிற்குள் நாய், பூனை போன்ற விலங்குகள் நுழைந்து சமைத்து வைத்திருக்கும் சட்டி பானைகளில் உள்ள உணவுப் பொருட்களை உருட்டி வீணாக்குவதோடு தின்று விடவும் செய்யும். இவ்வாறு அவ்விலங்குகளிடமிருந்து உணவை பாதுகாக்கும் பொருட்டு கண்டுப்பிடிக்கப்பட்ட பொருள்தான் உறி. உறியில் சிறிய அளவிலான ஒன்று முதல் மூன்று பானைகள் வரை வைக்கலாம். உறி நூலிலோ, நாரிலோ பின்னப்பட்டிருக்கும். உறியில் குழம்பு, சோறு, போன்வற்றையும் சமைத்த பானையோடு அப்படியே தூக்கி வைப்பர். இனிப்பு பலகாரங்களில் எளிதில் எறும்பு வந்து விடும் என்பதால் அதையும் பானையில் அல்லது தூக்குகளில் இட்டு உறியில் வைத்து விடுவர். பல சமயம் குழந்தைகள் இனிப்பை அதிகம் எடுத்துச் சாப்பிட்டு விடுவர் என்பதாலும் அவர்களுக்கு எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் உறியில் வைத்து விட்டு அம்மாக்கள் வேறு வேலைகளில் ஈடுபடுவர். அப்படியும் பிள்ளைகள் அண்டா அல்லது குண்டான்களை கவிழ்த்துப் போட்டு அம்மாக்களுக்குத் தெரியாமல் எடுத்து தின்பதும் உண்டு. தின்ற பிறகு உதையோ திட்டோ வாங்கிக் கட்டிக்கொள்வதும் உண்டு. கண்ணன் சிறு குழந்தையாக இருந்தபோது உறியில் வைத்திருக்கும் வெண்ணை, பாலை திருடி தின்றதாய் புராணங்களும், கதைகளும், ஆழ்வார் பாசுரங்களும் கூறுகின்றன. அது குறித்த பாடல்கள் ஏராளமாய் வைணவ சமய நூல்களில் ஏராளமாய் கிடக்கின்றன.
உறி பழந்தமிழர் இல்லங்களில் இன்றியமையாத ஒன்றாகவே இருந்தது. குறிப்பாக ஆயர் குல வீடுகளில் கட்டாயம் இருந்தன. காரணம் அவர்கள் தயிர், வெண்ணெய், பால் போன்ற வணிகத்தில் ஈடுபட்டிருந்ததால் அவர்கள் வீடுகளில் அதிகம் இருந்தன. `உறி

No comments:

Post a Comment