செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

சேனையூர் வரலாறு-4

சேனையூர் வரலாறு-4
கற்சுனையடி
சேனையூரை அண்டியுள்ள வயல் நிலங்களில் ,காடுகளில் பல கற்சுனைகள் காணப்படுகின்றன.ஆனாலும் கற்சுனையடி என அழைக்கப் படும் இடம் இளக்கந்தை போகும் பாதயில் ஆனக்கல் வெளியயை கடந்து போக ஒருகல் தொலைவில் உள்ளது.இந்த இடம் பற்றி பல சுவாரஸ்யமான கதைகள் சேனையூர்மக்களிடையே நிலவுகின்றன.கற்சுனையயை சூழ பல சிறிய குளங்கள் காணப்படுகின்றன .அந்த இடத்தில் எங்கள் அப்புச்சி 1970 ஆண்டளவில் சேனைக்காடு வெட்டி இருந்தார் அங்கு நாங்கள் சோழன் ,மரவள்ளி என பயிரிட்டிருந்தோம் .கற் சுனை என்பது கற்களுக்க்கிடையே வற்றாத நீரூற்று.கற்சுனையடியயை சூழ புராதன காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப் படுகின்றன.இன்று எங்களுடய காணிகள் அகதியாகிப் போன மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளதாக அறிகிறேன்.பல குடியிருப்புகள் உருவாகியுள்ளன.

No comments:

Post a Comment