செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரும் உபகதைகளும் கதைகள் உலாவும் தேசம்

சேனையூரும் உபகதைகளும்
கதைகள் உலாவும் தேசம்
பழங் கதை கூறும் மரபு உலகம் முழுவதற்கும் பொதுவானது.ஒரு சமூகத்தில் நிலவும் கதைகள் அந்த சமூகத்தின் பழைமையயயும் பண்பாட்டு செழுமையையும் ,வரலாறையும் உணர்த்துவன.பாட்டிமார் கதை சொல்லும் மரபு வழி வழியாக வந்த நம் பண்பாடு.முதியவர்களிடம் பல நூறு வருசங்கள் கடத்தி வரப்பட்ட கதைகள் நமது தொடர் வரலாறாக பதிவாகும்
நான் என் சிறு வயதில் பல நூறு கதைகளை கேடிருக்கிறேன்.மாயக் குதிரையில் மனிதர்கள்,நூலேணியில் இறங்கும் முனிவர்கள் ,ஏழு கடல் தாண்டும் இளவரசர்கள்,குள்ள மனிதர்கள்,பூதங்கள்,பேய்கள் ,அசுரர்கள் அதிசய மனிதர்கள் அவர்கள் சாகசங்கள் எததனை கதைகள் நம் காதுகளில் வழிந்தோடி இங்கு ஊரில் உலாவுகின்றன .நிலாக் காலங்கள் கதைகளின் காலமாக இருக்கும்.
என் பாட்டி மார்கள் எத்தனை கதைகளை சொல்லியிருக்கிறார்கள்.
தாரா இறைச்சியும் தவிட்டுப் புட்டும்(ஏழண்ணன் மாருக்கு ஒரு தங்கச்சி)
கத்தரிக்கா இளவரசி
ஓணானும் சோம்பேறியும்
என நீண்டு செல்லும் கதைகளின் பட்டியல்,
பெரியவர்கள் முதல் சின்ன குழந்தைகள் வரை இந்த கதைகள் ஈர்த்ததற்கான அடிப்படை காரணங்கள் என்ன ?
இந்த கதைகளை எத்தனை முறை திரும்பச் சொன்னாலும் அது தன் சுவாரஸ்யத்தை இழப்பதில்லை!நமது அடிப்படை சந்தேகங்களுக்காக விடைகள் இந்த கதைகளில் கிடைப்பதால் ஏற்படும் திருப்தி!
இதிலிருக்கும் கனவுலக மாயைகள், நம்பவைக்கும் தன்மையினால் சந்தேகமில்லாம இதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்!
இதில் மூலமாக ஆதிமனிதன் உலகத்திலிருக்கும் பல மர்மங்களுக்கு விடை தேட ஆரம்பித்தான்!இதில் வரும் பாம்பு நிலாவை விழங்கும் என்று சொன்ன இந்த மாதிரி கதைகளில் ஏற்பட்ட சுவாரஸ்யத்தினால் தான் விஞ்ஞானிகள் அது சந்திர கிரகணம் என்று கண்டு பிடித்தார்கள்!
பாம்பின் தலையின் ஒரு பாரம் இருக்கும். அந்த பாம்பு சோர்ந்து தலையைத் திருப்பினால் அந்த பாரம் கீழே விழந்து தான் பூகம்பமாக வெடிக்கிறது என்கிற கதையினால் பூகம்பதைப் பற்றி விஞ்ஞானம் தெரிந்து கொண்டது
இந்த கதைகள் மூலமாகத்தான் மனிதன், தன்னைச் சுற்றியுள்ள மிருக, தாவர ராஜ்யங்களை தெரிந்து கொண்டான்!
மிருகங்களின் புத்தியையும் பழக்கங்களையும் வைத்து அதை பல வகையாக பிரித்தார்கள்!
நரி என்றால் சூழ்ச்சி!
மென்மைக்கு பசு!
சிங்கமும், புலியும் கம்பீரம்!
வேகம்,மென்மை, புத்திசாலித்தனம் குதிரை!
நினைவாற்றலுக்கு யானை!
மனிதனுக்கு நெருக்கமானது குரங்கு!
தந்திரத்திற்கு காக்கை!
மெதுவாக இருந்தாலும், அழத்தமாக காலூன்று இருப்பது ஆமை!
முயல் வேகமாக இருந்தாலும் சோம்பேறி!
அடர்த்தியான இலைகளும், தடியான மரங்களும் கொண்ட கானகங்கள் திருடர்கள், கொள்ளக்காரர்களின் புகலிடங்கள்!
காட்டில் தனியாக குடிசை போட்டு வாழ்கிறவன் சந்தேகத்திற்குரியவன்!
இந்த நம்பிக்கைகளெல்லாம் கதைகளில் இறைந்து கிடக்கிறது!
ஏன்? எதற்கு? எப்படி ? என்கிற கேள்விகளை ஆதிமனிதனுக்குள் இந்தக் கதைகள் விதைத்தது!
இந்தக் கதைகள் முரட்டுத்தனமான கற்பனை கதம்பம்!
சூன்யக்காரர்களும், அரக்கர்களும் இந்த வகையைச் சேர்ந்தது!
இந்த கதைகள் வியப்பானவைதான்! அதில் விஞ்ஞான துல்லியங்களை எதிர்பார்க்க முடியாது!
சமுதாய வளர்ச்சியின் பால பாடமே இந்த நாடோடிக் கதைகளிலிருந்து கிளம்பியிருக்கிறது என்பதை சமூகவியல் ஆராய்ச்சி உறுதி செய்திருக்கிறது!
அந்தக் கதைகளில் சமுதாய வளர்ச்சி மட்டுமா அடங்கியிருக்கிறது!
நம் குழந்தைகளின் மனதில் அபாரமான ஆர்வத்தைத் தூண்டும், அவர்களை கற்பனை உலகத்தில் மிதக்க விட்டு பல லட்சிய வேர்களை அந்த பிஞ்ச மனங்களில் பதித்தது நம் பாட்டிமார்கள் கதைகள்!
யார் சொல்லப் போகிறார்கள்!

No comments:

Post a Comment