செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

சேனையூர் வரலாறு-8




சேனையூர் வரலாறு-6
சமுளங்குடா
சமுள என்பது நீண்டு ஓங்கி வளரும் பெரு மரம் .சேனையூரில் பல இடங்களில் சமுள மரங்கள் பணிவு வளவுகளில் அதிகமாக காணப்பட்டது.பின் நாட்களில் சொந்த தேவைகளுக்காக அந்த மரங்கள் ,வீடு கட்டுவதற்கும் ,பல்வேறு தேவைகளுக்குமாக பயன் படுத்தப்பட்டு,மரங்கள் அருகி போனது.சமுளங்குடாவில் பெரும் கூட்டமாக சமுள மரங்கள் இருந்த தாகவும் பின்னய நாட்களில் அவை பயன்படுத்தப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.மக்கள் வாழ்விடங்களிலேயே சமுள மரங்கள் காணப்படும் அந்த வகையில் சமுளங்குடாவும் மக்கள் வாழ்விடமாக இருந்திருக்கிறது.அதற்க்கான ஆதாரங்களை நாம் அங்கு காண முடியும்.பலதடவைகள் நான் அந்த இடத்திற்கு சென்றிருக்கின்றேன்.சமுளங்குடாவில்தான் திரு நற்சிங்கம் அய்யாவின் காணிகள் இருந்தன .சமுளங் குடாவை சுற்றியும் சிறிய குளங்கள் காணப் படுகின்றன.மக்கள் முன்னாட்களில் வாழ்ந்ததற்கான தடயங்களும் செறிவாக் உள்ளன.பழய செங்கற்கள்,மட் பாண்டங்களை இங்கும் காண முடியும்.

No comments:

Post a Comment