செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

சேனையூரின் பூர்விக வ்ரலாறு-1

சேனையூரின் பூர்விக வ்ரலாறு-1
உலக நாகரிகங்களின் வரலாறு நதிக் கரைகளிலும் ,ஆற்றோரங்களிலும் ,களிமுகங்களிலும் ,வளர்ந்துள்ளன .சேனையூரும் புராதன நாகரிகங்களில் ஒன்றாகவே வளர்ந்துள்ளது.தொல்லியல் ஆய்வாளர்கள் மனித நாகரிகத்தின் சுவடுகளை களியோடைக் கரைகளிலும்,சிறிய குன்றுகளிலும் ,கண்டு பிடித்துள்ளனர்.சேனையூரின் பெண்டுகள் சேனை பகுதி புராதன மக்கள் வாழ்விடம் இருந்ததற்கான தடயங்களை கொண்டுள்ளது.அங்கு காணப்படும் கறுப்பு சிவப்பு மட்பாண்டங்கள்.பழய செங்கற்கள் என்பன பழமையயை உணர்த்தி நிற்கின்றன.1985ல் யுத்த காலகட்டத்தில் சேனையூர் மிகப் பெரிய இடப் பெயர்வை சந்தித்தது.ஊர் மக்கள் எல்லோருமே அண்டையில் உள்ள தங்கள் வயல்களை அண்டியுள்ள காடுகளில் தஞ்சம் புகுந்தனர்.அப்படி சென்ற பொழுதே பழய அழி பாடுகளை காண முடிந்தது.இலங்கையில் நடைபெற்ற முதல் இடப் பெயர்வு இதுவெனவே நினக்கிறேன்.மூதூர் கிழக்கு மக்கள் முற்றாக காடுகளில் தஞ்சம் புகுந்திருந்தனர்.இலங்கை ராணுவத்தினர் பலரை கொலை செய்தனர்.அது தனி கதை .

No comments:

Post a Comment