செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் சமூக நடைமுறைகள் -2 குழந்தை பிறப்பு

சேனையூரின் சமூக நடைமுறைகள் -2
குழந்தை பிறப்பு
எல்லா சமுகங்களும் குழந்தை பிறப்பை பெரும் கொண்டாட்டமாகவே பார்க்கிறது.சேனையூர் மக்களும் அதற்கு விதிவிலக்கில்லை.
குழந்தை பிறக்கு முன் பெண்களை பக்குவமாக பார்த்தலும் ,பிள்ளை பிறத்தலுக்கான ஆயத்தமும் பெரும் எடுப்பில் நடக்கும்.சரக்கு தூள் இடித்தல்,சுறாக் கருவாடு காய வைத்தல்,மருந்து தூள் இடித்தல்,சோற்றுக்கான சீனட்டி அரிசி,ஏனய பத்திய பொருட்களை தயார் படுத்தல் என இந்த நடைமுறைகள் அமையும்.பத்தியம் என்பது பிள்ளை பிறந்தபின்பு தொடர்ந்து 31 நாடளுக்கு கொடுக்கும் உணவு பத்திய உணவு எனப்படும்.வருத்தம் வராமலும்,நன்றாக பால் சுரத்தலுக்குமான உணவாக இது அமையும்.
பிள்ளை பிறப்பில் மருத்துவிச்சியின் பங்கு முக்கியம்.பலரை நான் அறிவேன் ,தம்மங்மகடவ ஆத்த,வள்ளிஆத்த, இன்னும் பலர்......
பிள்ளை பிறப்பதற்கான நோவு கண்டுவிட்டால் வீட்டில் நெருங்கிய உறவினர்கள் கூடியிருப்பார்களாம்.பிறந்த பிள்ளையயை வரவேற்க.ஆம்பிளப் பிள்ளை பிறந்தால் வீட்டு கூரைக்கு மேலால் உலக்கை எறிவதும் ,பொம்பிள பிள்ளை பிறந்தால் விளக்கு மாறு எறிவதும் வழக்கம் இது ஒரு சேதி சொல்லும் முறமை என நாம் விளங்கிக் கொள்ளலாம்.
பிள்ளை பிறந்து நாலாம் நாள் மருங்கை சடங்கு அன்றுதான் பிள்ளையயயும் தாயயையும் பார்க்க எல்லோரும் அனுமதிக்கப் படுவர்.நெருங்கிய உறவினர்களுக்கு சாப்பாடும் ,பிள்ளை ப்றுவுக்கு உதவியாக இருந்த எல்லோருக்கும் உபகாரம் செய்தலும் நடைபெறும் .
31ம் நாள் துடக்கு கழித்தலும் வெளி உலகை பிள்ளைக்கு அறிமுகப் படுத்தலும்.பெரும்பாலும் பிள்ளை பிறந்து 31 நாட்களுக்கு தாயும் பிள்ளையும் வெளியே போக அனுமதிக்கப் பட மாட்டார்கள்..
பிள்ளை பிறந்ததிலிருந்தே தாலாட்டுப் பாடுகின்ற மரபு காணப்படுகிறது.பிள்ளையின் பாட்டி முதல் தாலட்டு பாடுவார்
தாலாட்டுப் பாடல்கள்
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே அடிச்சது ஆர்
கற்பகத்தை தொட்டது ஆர்
தொட்டாரை சொல்லியழு
தோள் விலங்கு போட்டிடுவோம்
அடிச்சாரை சொல்லியழு
ஆக்கினைகள் செய்திடுவோம்
மாமன் அடிச்சானோ
மாதாளம் கம்பாலே
மாமி அடிச்சாளோ
மல்லிகைப் பூ செண்டாலே
பாட்டி அடிச்சாளோ
பால் வார்க்கும் செம்பாலே
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ.
இப்படி நீண்டு கொண்டே போகும்
பிள்ளை பிறப்பில் 31ம் நாள் சடங்கு முக்கியம் வாய்ந்தது அன்று உறவினர் நண்பர்களுக்கு விருந்து கொடுத்தலும் பிள்ளையயை தொட்டில் போடுதல் என்பனவெல்லாம் நடக்கும் தாய் மாமனே தொட்டிலில் போடும் உரித்துடையவர்.31 வரை சீலை தொட்டிலே பாவிப்பர் .தொட்டில் பிரம்பு தொட்டில்,மரத் தொட்டில் என வகைபடும் இலுப்பை மரத்தில் தொட்டில் செய்வது மரபு.அன்றைக்கே பிள்ளைக்கான பரிசுப் பொருட்களை உறவினர் கொடுப்பர்.
பிறந்த நாள் முடி இறக்கல்
31ம் நாள் அல்லது அதற்கு பின் முடியிறக்கும் சடங்கு நடைபெறும் அனேகமானவர்கள் கோயிலுக்கு நேர்த்தி வைத்தே இதனை அந்த கோயிலுக்கே சென்று செய்வர்.மொட்டை வழித்த பின் உறவினர்கள் சேர்ந்து பலகாரம் கொட்டுவர்.சமையல் சாப்பாட்டோடு அந்த நிகழ்வு சிறப்பாக நடை பெறும்.இந்த நிகழ்வுகளுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ காது குத்து சடங்கும் நடை பெறும்.முன்னய நாட்களில் ஆண் குழந்தை பெண் குழந்தை என்ற வேறுபாடு இல்லாமல் இந்த காது குத்து சடங்கு நடை பெற்றதாக என் அப்புச்சி எனக்கு கூறியிருக்கிறார்.
பல்லுக் கொழுக்கட்டை கொட்டுதல்
பிள்ளைக்கு பல்லு முளைப்பதை உறவினர்களுக்கு அறிவித்து கொண்டாடுதல்.சிறிய சிறிய கொழுக்கட்டைகளாக செய்துஅவையும் எணய பலகாரங்களும்,சில்லறை காசும் தலையில் கொட்டுதல்,சிறு குழந்தைகள் மிகுந்த உற்சாகத்தோடு பொறுக்கி தங்கள் மடிகளில் கட்டிக் கொள்வர்.
குழந்தையின் ஒவ்வொரு பருவத்தையும் கொண்டாடும் மரபு தமிழர்களின் சிறப்பான பண்பாடு அதனை சேனயூர் மக்கள் சிறப்பாக பேணி வருகின்றனர்

No comments:

Post a Comment