செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

சேனையூர் வரலாறு -10





சேனையூர் வரலாறு -10
ஊற்றடி(ஊத்தடி) இந்த இடத்தை சூழவே உப்பு கரச்சையும் உப்பங் களியோடையுமாக இருக்க நல்ல தண்ணிர் கிணறுகளில் ஊற்றெடுக்கும்.இங்கு பேச்சு வழக்கில் ஊற்று ஊத்தெனவே அழைக்கப் படுகிறது.
சேனையூரின் ஆதி குடியிருப்புகளில் இதுவும் ஒன்று.பல நூறு வருசங்களுக்கு முன்பு மக்கள் இந்த இடத்திலேயே செறிவாக வாழ்ந்துள்ளனர்.பழமை வாய்ந்த குடியிருப்புக்கான எல்லா சான்றுகளும் உள்ளன.மிகப் பழய புழிய மரங்கள் .பெரும் பாலான வளவுகள் அண்மைக் காலம் வரை கற்களிலான வேலிகள் கொண்டே அமைக்கப் பட்டிருந்தன.இந்த கல்வேலிகளும் எங்கள் ஊர் தனித்துவங்களில் ஒன்று.கற்கள் கரும் பாறயாகஅல்லாமல் வெள்ளை கற்கள் .பார்க்கல் என்றே இதனை அளைப்பர்.இது சுண்ணம்புக்கல்லுமல்ல.ஒரு காலத்தில் ஏற்பட்ட நில நகர்வின் போது இந்த இடங்கள் மேலுயர்த்தப் பட்டிருக்க வேண்டும் ,இறுகிய பார்க் கல் சங்கு சிப்பி என்பனவற்றின் கூட்டுக் கலவை.சேனையூரின் ஆரம்ப கால வீடுகள் இப் பார் கற்களினாலேயே கட்டப் பட்டன.

No comments:

Post a Comment