செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

சேனையூர் வரலாறு-11


சேனையூர் வரலாறு-11
சோழ சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இலங்கை இருந்த போது .சேனையூர் சோழராட்சிக்கு உட்பட்டதாகவே இருந்துள்ளது.சோழர்கள் தங்கள் ஆழுகை பிரதேசங்களை பிரமொதயங்கள் என அழைத்தனர்.கொட்டியாரமும் ஒரு பிரமோதயமாகவே கருதப் பட்டுள்ளது.பிரமோதயங்கள் வள நாடுகள் என குறிப்பிடப் பட்டன.அந்தவள நாடுகளுக்கு பொறுப்பானவர்கள் கானகன் என அழைக்கப் பட்டனர்.தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள சுற்று மதிலில் உள்ள ஒரு கல்வெட்டு ஒன்றில் கொட்டியார கானகன் பற்றிய குறிப்பு காணப் படுகிறது.''In The Royal Temple Rajharajha and Instrument Of Imperial Chola Power''கீதா வாசுதேவனின் இந்த நூலில் 87ம் பக்கத்தில் கொட்டியாரம் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன..கொட்டியாரத்திலிருந்து நெல்லும் ,தங்கமும்,இலுப்பெண்ணையும் வரியாக செலுத்தப் பட்டதாக சொல்லப் படுகிறது.சேனையூரை சூழ நிறைய இலுப்ப மரங்கள் அந்த நாட்களில் இருந்ததாக சொல்லப் படுகிறது.இலுப்பங் கொட்டையிலிருந்தே இலுப்பெண்ணை எடுக்கப் படுகிறது.இலுப்பெண்ணை அனேகமாக கோயில்களில் விளக்கெரிக்கவே பயன்பட்டன.முன்னய நாட்களில் சேனையூரில் அனேகமான வீடுகளில் இலுப்பெண்ணை களஞ்சியப்படுத்தப் பட்டிருக்கும்.அண்மைக் காலம் வரை இலுப்பெண்ணையின் பயன்பாடு சேனையூரில் நிலவியது.எங்கள் அம்மமம்மா ஒவ்வொரு வருசமும் இலுப்பங் கொட்டை காலத்தில் இலுப்பெண்ணை காய்ச்சி வைத்திருப்பார்.ஆக சோழர் காலத்தில் இலுப்பெண்ணை சேனையூரிலிருந்தே சென்றிருக்க வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

No comments:

Post a Comment