செய்திகள்,வரலாறு,பண்பாடு

Saturday 15 August 2015

சேனையூரில் இயங்குகின்ற சமூக சங்கங்கள்.-1

சேனையூரில் இயங்குகின்ற சமூக சங்கங்கள்.-1

சேனையூர் சிறி கணேசா சன சமூக நிலையம்
மூதூர் பகுதியில் மிக நீண்ட வரலாறு கொண்டது.1957ல்உருவாக்கப் பட்டது.வாசிக சாலை ,விளையாட்டு பொழுது போக்கு என்பனவற்றுக்கு முக்கியம் கொடுத்து இயங்கியது.
இப் பிரதேசத்தின் முதல் வாசிக சாலை இங்குதான் தொடங்கியது.தனியே வாசிக சாலையாக இல்லாமல் சமூக ஒருங்கிணைப்பு கூடமாக இயங்கியது.
இன்று நாம் பார்க்கும் செல் போன் கோபுரங்கள் போல இரண்டு பெரிய இரும்பு தூண்களில் அன்ரனா பொருத்தப் பட்டு வானொலி இயங்கியது. செய்தி கேட்பதற்காக பெருமளவில் மக்கள் கூடுவர்.
கைபந்து விளையாட்டில் அகில இலங்கை ரீதியில் புகழ் பெற்றது சேனையூர் சிறி கணேசா விளையாட்டுக் கழகம்.மிகச் சிறந்த விளையாட்டு வீரர்கள் இங்கு உருவாகினர்.
சன சமூக நிலயத்தில் ஒரு சிறிய படிப்பகம் இயங்கி வந்தது.என் இளமைக் கால வாசிப்பு இங்கிருந்தே உருவானது.
மாலை நேரங்களில் இளைஞர்கள் கூடுவர்.பத்திரிகைகள் சஞ்சிகைகள் வாசிப்பர்,கரம் செஸ் போன்ற விளையாட்டுக்கள் களை கட்டும் .கைப்பந்து விளயாடுவதற்கு ஊரின் எல்லாப் பகுதியினரும் வருவர்.சிரேஸ்ற அணி கனிஸ்ற அணி என பல அணிகள் களத்தில் இருக்கும்.பலர் பழகுவதற்காக வருவர்.அவர்களுக்கு பயிற்சி அளிக்கப் படும்.
சேனையூரில் படித்த பலரும் இந்த சன சமுக நிலயத்தில் வளர்ந்தமை குறிப்பிடத் தக்கது.நானும் எனது நண்பர்களும் இரவு நேரங்களில் இங்கு தங்கியிருந்து படித்தோம்.நான் சசீஸ்குமார்,கிருபானந்தம்,அருளனந்தம்,அரசரெட்ன மாமா ,ஜெயம் அண்ணன்,செல்வன்,நவரெட்டினம் ,இரத்தினசிங்கம் என எல்லோரும் ஒன்று கூடும் இடமாக இருந்தது.
சன சமுக நில்யத்துக்கு முன்னால் உள்ள கோயில் காணியில் சிங்கள மாமா ஒருவர் தேனீர் கடை வைத்திருந்தார்.அவரிடம் நன்னாரி தேத்தண்ணி கிடைக்கும்.
1981ல் இங்குதான் எனது தலைமையில் சேனையூர் இலக்கிய வட்டம் உருவானது.பல கருத்தரங்குகள் ,விவாத மேடைகளை நாங்கள் நடத்தினோம்.
1985ம் ஆண்டுக்கு பின்னரான சூழல் எங்கள் சன சமுக நிலயத்தையும் சூறையாடியது.1990களில் முக்கியமாக இருந்த இயக்கமொன்று சன சமுக கட்டிட கூரை தகடுகளை தங்கள் முகாம் அமைப்பதற்க்காக எடுத்து சென்று விட்டனர்.
இன்று இயக்கமின்றி ஒரு வரலாற்றின் சாட்சியாக மட்டும் காட்சியளிக்கிறது.மீண்டும் இதை உயிர்ப்புள்ள இடமாக மாற்ற சேனையூர் இளைஞர்கள் முன் வரவேண்டும்

No comments:

Post a Comment