செய்திகள்,வரலாறு,பண்பாடு

Friday 14 August 2015

சேனையூரின் பொருளாதாரம்-2

சேனையூரின் பொருளாதாரம்-2
பாலும் தயிரும்
மந்தை வளர்ப்பு ஒரு துணை பொருளாதாரமாக இருந்து வருகிறது.இன்றய இயந்திர யுகத்துக்கு முன் வயல் வேலைகள் எல்லாம் .எருமை,கடா மாடுகளைக் கொண்டே செய்யப் பட்டன.வயல் உழவு,வயல் அடித்தல்.சூடடித்தல் என வயல் பொருளாதாரத்தின் உப அலகாக மந்தை வளர்ப்பு அமைந்திருந்தது.பெரும்பாலான வீடுகளில் பாலும் தயிரும் எப்போதும் இருக்கும்.
பலர்மிகப் பெரிய பசுமாட்டு பட்டிகளை வைத்திருந்தனர்.எங்கள் அப்புச்சியிடம் 60களில் நூற்றுக்கு மேற்பட்ட பசு மாடுகள் இருந்தன.இதைப் போலவே எருமை மாட்டு பட்டிகளும் இருந்தன சேனையூரின் ஊத்தடி தொடக்கம் வவ்வால் தூங்கி வரை உள்ள வீதியில் அனேகமாக எல்லோரிடமும் மாட்டு பட்டிகள் இருந்தன.
எருமைப் பால் கொத்து கணக்கிலேயே இங்கு அளவிடப் படும் இப்போதும் இந்த நடைமுறை உள்ளது.
எருமை மாட்டு பட்டி வைத்திருப்பவர்கள் விற்கப்படும் பால் தவிர மீதியயை தயிராக மாற்றுவர் .நெய் காய்ச்சுவதற்க்காக பால் ஆடையயை எடுத்து விட்டு தயிரை இலவசமாக கொடுப்பர்.காலையில் ,பட்டிக்காரர் வீடுகளுக்கு சென்றால் தயிர் வாங்கி வரலாம்.நான் என் இளமைக் காலத்தில் சட்டியயை எடுத்துக் கொண்டு காலையில் தயிர் வாங்க சென்று விடுவேன்.தண்ணி சோறும் தயிரும் சொல்ல முடியாத சுவை.



No comments:

Post a Comment