செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-15

சேனையூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-15
பாட்டன் குத்து
இந்த விளையாட்டும் சிறுவர்களிடையே வெற்றி தோல்வி சந்தோசம் துக்கம் என்ற விடயங்களை சமனாகக் கருதும் பண்பை வளர்க்கின்றன.
இரு இரு சிறுவர்களாக விளையாடுவதைக் காணலாம். ஒரு சிறுவர் கைகளை விரித்துக் கொண்டிருக்க மற்றவர் உள்ளங் கைக்குள் அடித்துக் கொண்டிருப்பார். கைகளை நீட்டி விரித்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள் அடித்துக் கொண்டிருக்கும் சிறுவனின் கைகளை பிடித்தால் பிடித்தவருக்கு வெற்றி பிடிபட்டவருக்கு தோல்வி. இவ்வாறு மாறி மாறி விளையாடுவர். இதனைப் பின்வருமாறு பாடி விளையாடுவர்.
“பாட்டன் குத்து
பறையன் குத்து
பிள்ளையார் குத்து
புடிச்சுப் பார் குத்து..
என வரும்
என்று பாடி விளையாடுவர். இவ்விளையாட்டு குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயும் குழந்தைக்கும் ஏனைய உறவுகளுக்கிடையேயும் இடம்பெறுவதுண்டு

No comments:

Post a Comment