செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-13 சங்கு விளையாட்டு

சேனையூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-13
சங்கு விளையாட்டு
சங்கு விளையாட்டில் சிறுவர்கள் பலர் கலந்துகொண்டு வீட்டினுள் அல்லது நிலவில் இரவு நேரங்களில் விளையாடுகின்றனர். நிலத்தில் வட்டமாக இருந்து கொண்டு சிறுவர்கள் கைகளால் பொத்திப் பிடித்துக்கொண்டு ஒருவரின் கைகளுக்கு மேல் இன்னொருவரின் கைகள் அடுக்கப்படும். இந்தக் குழு விளையாட்டுக்கு ஒரு சிறுவர் தலைமை தாங்குவார்.
அவரது ஒரு கை மட்டும் அடுக்கப்பட்டிருக்கும். மற்றக் கையினால் அடுக்கப்பட்டிருக்கும் கைகளைக் காட்டி இது யார் சங்கு என்று தொடங்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறவு முறையைச் சொல்லி அம்மா சங்கு அப்பா சங்கு என்பர் அழிக்கப்பட்டிருக்கும் அனைத்து கைகளில் யார் யார் சங்கு என்ற சொன்னவுடன் வொட்டவா? தீட்டவா? என்று கேட்பார். அதில் ஒருவர் வெட்டு என்றவுடன் விளையாட்டுத் தலைவர் இரண்டா வெட்டுவர் அவ்வாறு பிரிக்கப்பட்ட போது எல்லாச் சிறுவர்களும் தங்களின் கைகளை எடுத்து வாயில் வைத்து ஊ... ஊ... ஊ என்று உரத்துக் கூறுவர் இப்பாடல் பின்வருமாறு அமையும்,
இது யார் சங்கு
அம்மா சங்கு
இது யார் சங்கு
அப்பா சங்கு
இது யார் சங்கு
அண்ணா சங்கு
இது யார் சங்கு
அக்கா சங்கு
இது யார் சங்கு
தம்பி சங்கு
இது யார் சங்கு
தங்கை சங்கு
இது யார் சங்கு
வெட்டவா? தீட்டவா

No comments:

Post a Comment