செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

வரலாறும் சடங்குகளும் வதனமார் வேள்வி

வரலாறும் சடங்குகளும்
வதனமார் வேள்வி
ஒரு சமூகத்தின் வரலாற்றில் சடங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.வதனமாரின் தோற்றம் புராணங்களோடும் ஐதீகங்களோடும் தொடர்பு பட்டாலும் .ஒரு ஆதிச் சமூகத்தின் தொழிலோடும் நம்பிக்கைகளோடும் நெருக்கமான தன்மையயை கொண்டுள்ளது.160வதனமார் பற்றி பேசப்பட்டாலும் பாலவதனன்,தெளிவதனன்,படுவதனன்,காக்கவதனன்,குழுவதனன் போன்ற பெயர்களே வழக்கில் உள்ளன.
முல்லையும் மருதமும் முறையே இணங்கியிருக்கிற பிரதேசங்களிலேயே வதனமார் வழி பாடு காணப் படுகிறது.சேனையூர் முல்லையும் மருதமும் சிறப்பாக உள்ள இடம் சங்க இலக்கியத்தில் மாடு பிடித்தல் ஒரு முக்கிய சடங்காக, கருதப்பட்டது.வதனமார் சடங்கில் மாடு பிடித்தலே முக்கிய நிகழ்வு. குழுமாடு,எருமைகளை பிடித்து அடக்குவதே வதனமாரின் விளையாட்டாகும் குழுமாடுகளை கட்டி அடக்கும் ஒரு வீர விளையாட்டோடு இணைந்த சடங்கு இது.என்னுடய ஞாபகத்தில் சேனையூரில் இச் சடங்கு 70கள் வரை சிறப்பாக நடை பெற்றது .ஊத்தடியும் ஊத்தடி கரச்சையயை அண்டிய பகுதியும்,இச் சடங்கு நடை பெறும் பகுதிகளாக இருந்தன.சேனையூர் மக்கள் அண்றய நாட்களில் எருமை மாட்டு வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்டிருந்தனர் பலரிடம் பெரிய எருமை மாட்டு பட்டிகள் இருந்தன.இன்றும் இந்த மரபு தொடர்கிறது. குழுமாடு பிடிப்பதற்காக பொல்,மந்து,வெளுகண்ட கோடாரி,தண்டம்,வாழ்,வெளு கயிறு என்பன பயன் படுத்தப் பட்டன பின்னய நாட்களில் இவை வதனமார் உரு ஆடுபவர்களுக்கான பூசைப் பொருளாகியதையும் காணலாம்.
இச் சடங்கில் படிக்கப் படும் வதனமார் காவியம் ,வதனமார் குழுமாடு கட்டு காவியம்,என்பன இலக்கியங்களாக உள்ளன.
மட்டக்களப்பு,தம்பலகாமம்,சம்பூர் ஆகிய இடங்களிலும் இச் சடங்கு நடை பெறுகிறது


 ககதிர வெளியில் இன்றுவரை வதனமார் வேள்வி நடைபெற்று வருகிறது இந்த ஆண்டு 2015ல் நடை பெற்ற வேள்வி பற்றி விரிவான பதிவொன்றை Battinews  இணைய தளம் தந்துள்ளது   
''கதிரவெளி வதனமார் ஆலயம் மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுவது மரபு அந்த வகையில் இவ்வருடமும் வதனமார் சடங்கு வேள்வி நிகழ்வுகள் கதிரவெளி போடியார் பரம்பரை குடியினரால் மிகவும் சிறப்பான முறையிலே நடைபெற்றதுமட்டுமல்லாது பார்ப்பவர்களை மெய்சிலிக்கவும் வைத்தது.

 நடைபெற்ற வதனமார் சடங்கு நிகழ்வில் இளந்தாரிமார் (காட்டிற்கு மாடுபிடிக்க செல்லுவர்களை அழைப்பது)  மாடு பிடிக்க செல்லுதல் நிகழ்வு முக்கிய இடம்பெறுகின்றது. அந்தவகையில் இம்முறையும் இளந்தாரிமார்கள் படையெடுத்து காட்டிற்குச் சென்று காட்டுமாடு (குழு மாடு) சென்ற காட்சிகளை படங்களில் காணலாம்.

இவ்வதனமார் சடங்கு வேள்விகளை போடியார் பரம்பரையினரே இங்கு முன்னின்று நடாத்துவது வழமையாகவும் மரபாகவும் உள்ளது. அதுமட்டுமல்லாது இங்கு நடைபெறும் வேள்விகளுக்கும் கூட பராம்பரை பூசாரியினரே அந்த அந்த வேள்விகளை செய்வது வழமையாகவுள்ளது. 
   
பல நாட்களாக சென்றவர்களை எதிர் பார்த்து இருந்த ஆலய பூசாரி மற்றும் பொதுமக்கள் அவர்கள் வருவதை அறிந்து காட்டின் எல்லைக்கு சென்று அவர்களை பரையடித்து வெள்ளை பிடித்து அழைத்துவருதை படங்களில் காணலாம். 





அழைத்து வரப்பட்ட இளந்தாரிமார் மாடு பிடிக்க கொண்டு சென்ற மீதி கயிறுகளை ஆலயத்தில் வைத்து விட்டு நீராடி வந்த பின்பு அங்கு பூசைகள் நடைபெற்றன. அதன் பின்பு காட்டிற்கு சென்ற இளந்தாரிமார்கள் அனைவரும் வதனமார் தெய்வம் உருவெடுத்து ஆடுவதையும், அவர்களுக்கு வாத்தியம் வாசிப்பவர்களையும் படங்களில் காணலாம். 




அதன் பின்பு இளந்தாரிமார்கள் மற்றும் ஆலய பூசகர்கள் உட்பட அனைவரும் நேர்ப்பு நோர்த்தனர் (அன்னதானம்) 
இவர் தான் 50 வருடமாக இவ்வேள்வி பூசைகளை செய்துவந்த பழம்பெரும் பூசாரியான சித்திரன் கிருஸ்ணப்பிள்ளை . தற்போது இவருக்கு கண்பார்வை இல்லாமல் இருந்தும் கூட அனைத்து விடயங்களையும் அவர் சார்ந்த பூசாரிக்கு கற்றுகொடுத்து வழிநடுத்திவருகின்றார்''

நன்றி Batti news.com

1 comment:

  1. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete