செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் சமூக நடைமுறைகள் -3 வீடு கட்டுதலும் குடிபோதலும்

சேனையூரின் சமூக நடைமுறைகள் -3
வீடு கட்டுதலும் குடிபோதலும்
சேனையூர் சமூகம் ஒற்றுமை மிக்க ,மற்றவர்களுக்கு உதவி புரியும் சமூகமாகவே இருந்து வந்துள்ளது.தொடர்த்து வந்த காலங்களில் சில நடைமுறைகள் மாறியுள்ளன.
அன்றய காலகட்டங்களில் ஒருவர் வீடு கட்ட தொடங்கி விட்டால் அவருக்கான எல்லா உதவிகளையும் ஊரவர் உறவினர் இணைந்து செய்தனர் .
வீடுகட்டுதலில் சேனையூர் சமூகம் மற்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.அன்றய நாட்களில் பெரும்பாலான வீடுகள் களிமண்ணினாலும் செனையூர் பார்க்கற்களினாலுமே கட்டப் பட்டன.சேனையூரில் ஒருவகையான கற்கள் கிடைக்கின்றன கருங்கற்கள் போலவோ யாழ்ப்பாண சுண்ணாம்பு கற்கள் போலவோ இல்லாமல்.பழய கடல் படுக்கைகளின் சேற்கையாக உள்ளன.சேனையூர் பணிவு வளவுகளில் இது ஒரு படையாகவே படிந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.அதனால்தான் வீட்டு வேலிகள் கூட இந்த பார்க்கற்களினால் அமைக்கப் பட்டன.
வீடுகட்டுவதற்கு தேவையான மரம் தடிகளை காட்டுக்கு சென்று தறித்து வருவர் வண்டில் மாடு வைத்திருக்கும் உரவினர்களின் உதவியுடன் இது நடைபெறும்.சேனையூரை அண்டிய பகுதிகளில் வீடு கட்டுவதற்கு தேவையான மரங்கள் காடுகளில் நிறைவாகவே இருந்தன.நல்ல நாள் பார்த்தே இந்ய்ஹ வேலைகளை செய்வர்.மரம் தடி வெட்ட போவதும் அதனோடு வருகின்ற சமூக உறவாடலும் சாப்பாடு போடுதலும் மகிழ்ச்சியான பொழுதுகள்.தண்ணியும் கலந்த மகிழ்வின் கூடல் அது.
களிமண் சுவர் அமைத்தல் ஒரு கலை என்றே சொல்லலாம் என் அம்மம்மா இதில் மிகுந்த கெட்டிக்காரி.பலர் அம்மம்மாவை அழைப்பர் தனக்கு நேரம் கிடைக்கும் போது அம்மம்மா மற்றவர்களுக்கு செய்து கொடுப்பார்.கல்லோடு இணைது களிமண் சுவர் பின் அதற்கு வண்ணம் பூசுதல் ,காடுகளில் கிடைக்கு நல்ல சிகப்பு களிமண்ணை கரைத்து வடித்து இந்த வண்ணம் தயாரிக்கப்படும். மெழுகிய சுவரில் பின்னர் பூசப் படும் ,அதோடு சுண்ணாம்பு வண்ணம் கோடுகளிலான அலங்காரமாக மாறும்

No comments:

Post a Comment