செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்-3 பாண்டி விளையாட்டு

சேனையூரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்-3
பாண்டி விளையாட்டு
சேனையூரில் முன்னய நாட்களில் மிக பிரபலமான விளையாட்டு இது பற்றிய வரலாற்று குறிப்புகளை பார்க்கும் போது பெண்களுக்கு உரிய விளையாட்டாகவே பேசப் பட்டாலும் ,சேனையூரில் ஆண்களும் சேர்ந்து விளையாடும் விளையாட்டாக உள்ளது.தமிழ் நாட்டில் இது பெண்களுக்கான சீர் வரிசைகளில் ஒன்றாக இருந்துள்ளது.
எல்லோர் வீடுகளிலும் இது ஒரு முக்கிய விளையாட்டு பொருளாக இருந்து வந்துள்ளது
என்னுடய அம்மம்மா ஆச்சி என எல்லா உறவினர்களும் விளையாடியதை நான் பார்த்திருக்கிறேன்.
பல்வகை மரங்களிலும் இது செய்யப்படும் அழகிய வேலைப்பாடுகளுடன் இது காணப்படும் வெண்கலம் ,ஐம்பொன்னிலான பாண்டிக் குழிகளை நான் பார்த்திருக்கிறேன்.அரசிகள் விளையாடிய பாண்டிக் குழிகள் தங்கத்திலானது என என் அம்மம்மா சொல்வார்.
எங்கள் ஊரில் புளியங் கொட்டை,முள்முருக்கை விதைகள் இதற்கு பயன்படுத்தப்படும்.
இந்தியவில் இதனை பல்லாங்குழி எனவும் அழைப்பர்.
நிலத்தில் குழிகள் அமைத்தும் விளையாடுவர்.நான் விளையாடியிருக்கிறேன் நிலக் குழிகளில்.
பாண்டி விளையாடும் முறை
நிலத்தில் இருவரிசையில் ஏழு ஏழு சிறு குழிகளைக் கிண்டி அவற்றுள் புளியங்கொட்டைகளை 5,5 ஆகப் போட்டு வைத்தல். ஒரு குழியில் இருப்பதை எடுத்து ஒவ்வொன்றாக அடுத்த அடுத்த குழிகளுள் போட வேண்டும் . முடிந்தவுடன் அதற்கடுத்த குழியில் உள்ளதை எடுத்து அப்படியே சிந்திவர வேண்டும். முடிந்தவுடன் ஒரு வெறுங்குழி வருமாயின் அதைத் தடவி அடுத்த குழியில் இருப்பதை தனக்குரியதாக்க வேண்டும். ஒரு குழியில் நான்கு இருந்தால் அதையும் ‘பசு’ எனச் சொல்லி தனதாக்க வேண்டும். கூடப் புளியங்கொட்டை வைத்திருப்பவர் வெற்றியாளர் ஆவார். இதில் கூடுதலாக எண்ணற பயிற்சியும், அவதானமும் தான். இருவர் மட்டுமே விளையாடலாம்

No comments:

Post a Comment