செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்-10 ஊஞ்சல் விளையாட்டு


சேனையூரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்-10
ஊஞ்சல் விளையாட்டு
சங்க காலம் முதல் இன்றுவரை தமிழர்கள் மத்தியில் தொடர்ச்சியாக பேணப்பட்டு வரும் விளையாட்டு சேனையூரிலும் தனித்துவமான பண்புகளோடு தொடர்கிறது.
வருசப் பிறப்பு கொண்டாட்ட காலங்களிலும் சிவராத்திரி விழா நாட்களிலும் சேனையூரில் ஊஞ்சல் களைகட்டும்
சேனையூரின் நடுவே உள்ள பெரிய புளிய மரங்களிலும் வீடுகளில் உள்ள பெரு மரங்களிலும் ஊஞ்சல் கட்டுகிற மரபு காணப்படுகிறது.அன்றய நாளில் எங்கள் பணிவு வளவில் பெரிய புன்னை மரம் இருந்தது அதில் பெரிய ஊஞ்சல் கட்டியதை நான் பார்த்திருக்கிறேன் .
ஊஞ்சல் ஆடும் முறை
1)தனியொருவர் நடுவில் நின்று உச்சி ஆடுதல்.
2)இருவர் இரண்டு முனைகளிலும் நின்று உச்சியாடுதல்.
3)நடுவில் பலபேர் இருக்க இரண்டு முனகளிலும் இருவர் நின்று உச்சியாடுதல்.
ஊஞ்சல் ஆடும் பொழுது கீழே இருந்து பலர் ஊஞ்சல் பாடல்களை பாடுவர்.சேனையூரில் பல கதைகள் ஊஞ்சல் படல்களாக உள்ளன.கண்டிராசன் கதை,நல்லதங்காள் கதை என்பனவும் குறிப்பிடத் தக்கன.
என் அம்மம்மாவின் தங்கச்சி பூவதி அக்கம்மா ஊஞ்சல் பாடல் பாடுவதில் புகழ் பெற்றவர்.
இரண்டுவகையான ஊஞ்சல் தருக்கள் சேனையூரில் பயில் நிலையில் உள்ளன.
1)தன தன தானினோம் தான
தன தன தானினோம் தான
தான தனாதன தான தனாதன
தான தனாதன தான தனாதன
தானேஏஏஏ......... ..
2)தந்தன தான தனாதென தந்தென தந்தன தானானா ஆ..............
தந்தென தான தனாதென தந்தன
தந்தென தானானா ஆஆ.....
இந்த பாடல்களின் இசைக்கேற்ப ஊஞ்சல் மேலேறி கீழ வரும்.இருவர் சேர்ந்தும் குழுவாகவும் இப்பாடல்கள் பாடப் படும் நேரம் ஆக ஆக பாடல்களின் வேகம் கூட கூட ஊஞ்சலாட்டம் எகிறி பறக்கும்

No comments:

Post a Comment