செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் மறைந்து போன சிறு கைத்தொழில்கள் -1 சட்டி பானை செய்தல்

சேனையூரில் மறைந்து போன சிறு கைத்தொழில்கள்
சட்டி பானை செய்தல்
சேனையூரில் தங்களுக்கு தேவையான வீட்டில் உபயோகப் படுத்தும் மண் சட்டி பானைகளை தாங்களே செய்யும் மரபு காணப்பட்டது ,பின்னய காலங்களில் அது இன்று மறைந்து விட்டது என்றே சொல்லலாம்.
சேனையூரின் வயல் பிரதேசங்களில் கிடைக்ககக் கூடிய களிமண்ணை பதப் படுத்தி சட்டி பானை செய்தனர்.அனேகமாக எல்லா வீடுகளிலும் பெண்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறிய சோறாக்கும் பானைகள்,கறிச்சட்டி,சிறிய குண்டான்,அரிக்கஞ்சட்டி,குரச்சி,கறிமூடி,என பல் வகைப்படும்
என் அம்மம்மா,அம்மா,கல்லம்பார் ஆத்த,பூபதி அக்கம்மா,என ,எங்கள் பெரிய மாமி என பலரும் இதில் வல்லவர்கள்.
மிக நேர்த்தியான அழகான சட்டி பானைகளாக அவையிருந்தன.

No comments:

Post a Comment