செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

சேனையூர் வரலாறு- 6

சேனையூர் வரலாறு- 7
வேம்படி தோட்ட நடு கற்கள்
நடுகல் பண்பாடு தமிழர் மரபில் காலம் காலமாக இருந்து வரும் மரபு,சங்க இலக்கியங்கள் நடுகற்கள் பற்றி நிறையவே சொல்கின்றன.அது போல முது மக்கள் தாழி தமிழரின் தொல்லியல் சான்றுகளாக உள்ளன.சேனையூர் மக்களின் விவசாய நிலங்களில் ஒன்றான வேம்படித் தோட்டப் பகுதியில் கூட்டமாக நடு கற்கள் காணப்பட்டன.நான் பல்கலைக்க் கழகத்தில் தொல்லியலை ஒரு துணைப் பாடமாக எடுத்திருந்தேன் .அந்த நாட்களிலேயே இந்த நடு கற்கள் என் கண்ணில் பட்டன.இங்கு ஒரு இடத்தில் கூட்டமாக நடு கற்கள் காணப் பட்டன இப்போ அதன் நிலமை என்னவென எனக்கு தெரியாது.இது ஆதிகாலத் தமிழர் வாழ்விற்க்கான சான்று.நான் பலமுறை அந்த இடத்திற்கு சென்றிருக்கின்றேன்.2006 யுத்தம் தீவிரமடந்த கல கட்டத்தில் பெரும் பாலான சேனையூர் மக்கள் இந்த பிரதேசத்திலேயே தஞ்சம் அடைந்திருந்தனர்.வேம்படித் தோட்டப் பகுதியிலேயே என் அம்மம்மாவின் தங்கை பூபதி அக்கம்மாவின் சேனை அமைந்த்திருந்தது.துரை ராசா மாமாவுடனேயே நான் இந்த இடங்களுக்கு சென்று வந்தேன்.

No comments:

Post a Comment