செய்திகள்,வரலாறு,பண்பாடு

Friday 14 August 2015

சேனையூர் வரலாறு-16
பிரித்தானியர் ஆட்சிக் காலமும் சேனையூரும்
1796ல் இலங்கையயை கைப்பற்றிய பிரித்தானியர் 1948 வரை கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் இலங்கையயை ஆண்டனர்.அவர்கள் ஆட்சிக் காலத்தில் ,நாடு முழுவதும் மெதடிஸ்த மிசனரிமாரால் பாடசாலகள் ஆரம்பிக்கப்பட்டன .கிராமங்கள் நகரங்கள் என அவை விரிவடைந்தன..கத்தோலிக மிசனரிமாரும் பாடசாலைகளை உருவாக்கினர்.கிழக்கு மாகாணத்தில் முதல் பாடசாலை1814ல் மட்டக் களப்பில் மெதடிஸ்த மத்திய கல்லூரி உருவாகியது.1819ல் திருகோணமலையில் மெடடிஸ்த பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப் படுகிறது.1820 மட்டக்களப்பில் வின்சன்ற் மகளீர் கல்லூரியும்,1823ல் திருகோணமலை பெருந்தெரு மெதடிஸ்த மிசன் பாடசால்யும்(இன்று விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் என்ற பெயரில் இயங்குகிறது)ஆரம்பிக்கப் பட்டது.கத்தோலிக்க மிசனரிமார் கொட்டியாரப் பிரதேசத்தில் 1865ல் மூதூரில் புனித அந்தோனியார் பாடசாலையயை உருவாக்குகின்றனர். கொட்டியாரப் பிரதேசத்துக்கு வந்த மெதடிஸ்த மிசனரிமார் மூதூரில் ஒரு தேவாலயத்தை அமைத்த அதே வேளையில் ,பாடசாலைகளை அமைக்க கிராமப் புறங்களை நோக்கி சென்றனர்.1895ல் கிளிவெட்டி மெதடிஸ்த மிசன் பாடசாலை தொடங்கப் பட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.இதே காலப் பகுதிலேயோ அல்லது இஅற்கு முன்னரான காலப் பகுதிகளிலோ ,ஆனைத்தீவு,கூனித்தீவு ஆகிய இடங்களில் மெதடிஸ்த மிசன் பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டதாக கொள்ளமுடியும்.இந்த காலப் பகுதியிலேயே சேனையூர் மெதடிஸ்த மிசன் பாடசாலையும் ஆரம்பிக்கப் பட்டது.(இன்றய கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயம்) 70பதுகளில் பெயர் மாற்றம் நடைபெறும் காலம் வரை தி/சேனையூர் மெதடிஸ்த மிசன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலஎன்ற பெயரிலேயே இயங்கியது

No comments:

Post a Comment