செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் மறைந்து போன சிறு கைத்தொழில்கள்-4

சேனையூரில் மறைந்து போன சிறு கைத்தொழில்கள்-4
Balasingam Sugumar's photo.
பாய் இழைத்தல்
எல்லா வளமும் கொண்டது எங்கள் கிராமம்.
1)தென்னோலை பாய்
2)கற்பன் பாய்
3)சாப்ப பன் பாய்
4)பன ஓலைப் பாய்
5)புற் பாய்
எல்லாவகையான பாய்கள் இளைக்க்கப் பட்டாலும் பன் பாய்தான் படுக்கைக்கும்,வீட்டுக்கு வருபவர்களை வரவேற்பதற்கும் பயன் பட்டது.
முன்னய நாட்களில் சோபா செட்கள் பயன் பாட்டில் இருக்கவில்லை நம் பண்பாடு பாய் போட்டு வரவேற்பதே ,பாயில் இருப்பதும் ,படுப்பதும் ஒரு சுகமான அனுபவம்தான்.
சேனையூரோடு இணைந்துள்ள சம்புக் குளத்திலும்,பாட்டாளி புரத்துக்கு பக்கத்தில் உள்ள பன் வெளி கரைச்சையிலும் கற் பன் நன்கு வளரும்.அங்கிருந்து கொணர்ந்து பன்னை வார்ந்து காயவைத்து பின் கோழி சாய வண்ணம் பூசி பாயிழைப்பர்.
அன்றய நாளில் சேனையூர் பெண்கள் இதனை ஒரு பொழுது போக்காக செய்தனர்.சிலர் தங்கள் கை செலவுக்காக செய்தனர்.சில ஆண்களும் இதில் ஈடுபடுவதை கண்டிருக்கிறேன்.எங்கள் கோவிந்த மாமா இந்த வேலைகளில் கெட்டிகாரர்.
பாயிழைப்பது மாத்திரமில்லாமல்,கடகம்,குட்டான்,நாளி,பெட்டி,முதலான ஓலைப் பொருட்களும் செய்தனர்

No comments:

Post a Comment