செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-2 உரலும் உலக்கையும்

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-2
உரலும் உலக்கையும்
பண்டய தமிழர் வாழ்வில் இவையிரண்டும் முக்கிய பயன்பாட்டு உபகரணங்களாக விளங்கின
சேனையூரில் உரல் உலக்கை பயன்பாடு இன்று வரை தொடர்கிறது.உரலில் இடிக்கப்படும் மா,கொச்சிக்காய் தூள் என்பனவற்ற்றின் ருசியே தனி.
நாவல் மரம்,முதிரை மரம் ஆகியவை யே சேனையூரில் உரலுக்காக பாவிக்கப் படும் மரங்கள்.உரலில் அலங்கார வேலைப் பாடுகளும் செய்வதுண்டு.
உரல் என்பது அரிசி முதலான தானியங்களைக் குற்ற, இடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்று அடி வரை உயரமுள்ள ஏறத்தாழ ஓர் அடி விட்டமுள்ள மரத்தினால் அல்லது கருங்கல்லினால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பக்கத்தில் அரை அடி முதல் ஓர் அடிவரையான ஆழத்தில் ஒரு குழி போன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தக்குழிக்குள் அரிசி முதலான தானியங்களை இட்டு உலக்கையைப் பாவித்து குற்றுவார்கள். இப்படிச் செய்வதால் அதற்குள் இடப்பட்ட தானியம் துகள்களாக்கப்பட்டுப் பின்னர் பொடியாக்கப்படும்.
உரலில் தானியங்களைப் பொடியாக்குவதுபோல் சில தானியங்களின் வெளிப்புற உமியை நீக்குவதற்கும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, நெல் மணிகளை உரலில் இட்டு சிறிதுநேரம் குற்றுவதன் மூலம் அரிசியும் உமியும் வெவ்வேறாகப் பிரிக்கப்படும்.
சேனையூரில் உரல் பல்வேறு தேவைகளுக்காக்ச பயன் படுத்தப்படுகிறது.சம்பல் இடித்தல் ,எள்ளுப் புண்ணாக்கு
மற்றும் பல்வேறூ வகைஒயான துவையல்கள் செய்ய பயன் படுகிறது.அத்தோடு சடங்குகளில் சுண்ணம் இடிப்பதற்கும்
பயன்படுகிறது.
உரலோடு சேர்ந்து உலக்கையும் சேனையூரின் வாழ்வியலோடு இணைந்துள்ளது.
உலக்கை என்பது உரலில் மாவு இடித்தல், தானியங்களில் இருந்து உமியை நீக்குதல் போன்றவற்றுக்குப் பயன்படும், மரத்தாலான ஒரு மெல்லிய உருளை வடிவான தண்டு ஆகும். சுமார் ஐந்து அடி நீளமும் இரண்டரை அங்குலங்கள் வரை விட்டமும் கொண்ட இதன் இரு முனைகளிலும் இரும்பால் செய்யப்பட்ட பூண்கள் பொருத்தப்பட்டிருக்கும். இப் பூண் உலக்கையின் நுனி, இடிப்பதனால் பிளந்து போகாமலிருக்க உதவுகிறது. மாவு இடித்தல், நெல்லுக் குற்றுதல் போன்ற செயற்பாடுகளின்போது உலக்கையை நிலைக்குத்தாக மேலே தூக்கி, உரலுக்குள் இருக்கும் பொருட்களின் மீது வேகமாக விழவிடப்படும். பொதுவாகப் பெண்களே இவ்வேலைகளைச் செய்வதால், அவர்கள் இலகுவாகத் தூக்கிக் கையாளுவதற்கு வசதியாக உலக்கையின் எடை அமைந்திருக்கும். ஒரு உரலில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேலை செய்வதும் உண்டு. அப்போது இரண்டு அல்லது மூன்று உலக்கைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட உலக்கைகள் ஒரே குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் மாறிமாறி உரலுக்குள் விழுந்து எழுவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
தமிழிலக்கியங்கள் உலக்கை பற்றிய குறிப்புகளை நிறயவே தருகின்றன.
சிலப்பதிகாரம்
உலக்கையைக் கொண்டு தானியங்களைக் குற்றும் பொழுது பெண்கள் பாடும் பாட்டு வள்ளைப்பாட்டு என அழைக்கப்படுகிறது. உலக்கையைக் கொண்டு தானியங்களைக் குற்றும் பொழுது பெண்கள் தலைவனைப் புகழ்ந்து பாடுவதாகச் சிலப்பதிகார வாழ்த்துக் காதை கூறுகிறது. இது ”வள்ளைப்பாட்டு” எனக் குறிப்பிடப்படுகின்றது. வள்ளை என்றால் உலக்கை எனவே ”உரற்பாட்டு, உலக்கைப்பாட்டு, அவலிடி, அம்மானை வள்ளை என்ற பெயர்களாலும் இப்பாடல் அழைக்கப்பட்டது.
புறநானூறு- வள்ளைக்கூத்து
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் நாட்டுப்புற மக்கள் நெற்கதிர் வரிந்த கூரை வீடுகளின் முன்பு கரும்பை வாசலில் தோரணமாகக் கட்டியுள்ளனர். தானியம் குவியலாகக் கிடக்கிறது. பெண்கள் உலக்கையைக் கழுவி அணி செய்து வைத்திருக்கிறார்கள். அது நெல் குற்றுவதற்காக அல்லாமல் வள்ளைக் கூத்தோடு களத்தின் நடுவே கிடத்துவதற்காக வைத்திருக்கிறார்கள். இவ்விழாவில் வள்ளைக் கூத்து, நெல் குற்றுவது போல ஆடும் கூத்து ஆடப்படுகின்றது. என புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.[6]உழவுத் தொழிலின் தொடக்கக்காலத்தில் மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டிருந்தமயும் அத்தொழிலில் மகளிரின் பங்கை வலியுறுத்துவதாகவும் இக்கூத்து ஆடப்பட்டது.
குறுந்தொகை
குறுந்தொகையின் மருதத் திணைப் பாடல் ஒன்றில் உலக்கையால் தானியம் குற்றும் பொழுது வள்ளைப் பாடல் பாடப்பட்டது என்பதனை,
”பா அடி உரல பகுவாய் வள்ளை
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப…
மெய் இயல் குறுமகள் பாடினாள் குறினே”
என்று குறிப்பிடுகின்றது. இதில் தலைவியானவள் பரந்த அடிப்பாகத்தையுடைய உரலின் வட்டவடிவமான வாயினிடத்தே உலக்கையால் தானியம் குற்றும்போது வள்ளைப் பாட்டைப் பாடிக் குற்றினாள் என்று கூறப்பட்டுள்ளது
உலக்கை பற்றி என்னுடய முப்பாட்டன் ஒரு பாடல் பாடியிருக்கிறார்
''நெல்குற்றும் நீண்ட புவியளக்கும்
பக்கத்தில் ஓடிவரும் பாம்படிக்கும்
.........
சிந்து கவி பாடவந்த சந்த புலவனுக்கு
சந்துடைக்க நல்ல தடி''
என் முப்பாட்டன் ஒரு புலவர்.இந்தியாவிலிருந்து வாது கவி செய்ய வந்தவர்களோடு போட்டியிட்டு வென்றவராம்.

No comments:

Post a Comment