செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

சேனையூர் வரலாறு-12 அடப்பன் முறை

சேனையூர் வரலாறு-12
அடப்பன் முறை
கொட்டியாரத் தேச வளமைகள் பற்றி கோணேசர் கல்வெட்டு பல விடயங்களை கூறுகிறது.இந்த வழமைகள் மட்டக்களப்பு தேச வழமைகள் போன்றோ ,யாழ்ப்பாணத்து தேச வழமைகள் போன்றோ இல்லாமல் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளது.ஊரின் தலைமை காரரை அடப்பன் என அழைத்தனர்.கொட்டியார அடப்பன் முறை பற்றிய தகவல்களை நாம் கங்கு வேலி சிவன் கோயிலிலில் உள்ள கல்வெட்டு ஒன்றின் மூலம் உறுதிப் படுத்தி கொள்ளலாம்.''ஏழூர் அடப்பன்''என்கிற குறிப்பு இங்கு வருகிறது சேனையூரில் அடப்பன் முறை,அண்மைக் காலம் வரை இருந்தது.கடசியாக இருந்தவர் ,திரு.கதிரவேலியர்.அவர் 70பதுகளில் அவர் மரணமடந்ததோடு ,அடப்பன் முறையும் முடிந்து போனது.கங்குவேலி கல்வெட்டு சொல்கிற கொட்டியாரத்தின் ஏழூர் அடப்பன்களில் சேனையூரும் ஒன்றெனவே இதிலிருந்த்து ஊகித்து கொள்ளலாம்.அடப்பனார் என்றே அழைக்கும் முறையயை நான் என் வாழ் நாளில் கண்டிருக்கிறேன்.அடப்பனார் என்பதற்கு நெய்தல்நில தலைவன் என தமிழகராதி பொருள் தருகிறது.


No comments:

Post a Comment