செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

சேனையூர் வரலாறு-14 சேனையூரும் அதனை அண்டியுள்ள குளங்களும்



சேனையூர் வரலாறு-14
சேனையூரும் அதனை அண்டியுள்ள குளங்களும்
சேனையூரின் வரலாறு குளங்களையும் வயல் நிலங்களையும் அடிப்படையாக கொண்டு வளர்ந்துள்ளது.விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இவ் ஊர் மக்கள் வரலாறும் விவசாயத்தோடு தொடர்பு பட்டுள்ளது.மயிலி மலைக் குளம்,ஆனைக்கல் குளம்,கிழல் வெளி குளம்,குளத்து சேனை குளம்,நய்யந்த குளம்,வேலப் பெருமா குளம்,சம்புக் குளம்,இளக் கந்த குளம்,பூவரசங் குளம் ,ஆலங் குளம்,மரவட்டக் குளம் ஆகியவற்றோடு இணைந்த விவசாயம் இம் மக்களது.இதனை விட நூற்றுக்கு மேற்பட்ட சிறிய குளங்கள் சேனையூரை அண்டி காணப்படுகின்றன.எல்லா குளப் பகுதிகளுக்கும் நான் சென்றுள்ளேன்.குளங்களை சூழ உள்ள இடங்களையும் நான் அவதானித்துள்ளேன்.குளங்களை அண்டி பழைய குடியிருப்புகள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப் படுகின்றன.காடுகளில் மறைந்து கிடக்கும் பல குளங்களின் அருகே ஒருநாகரிகம் வளர்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் நிறையவே காணப்படுகின்றன.ஒரு காலத்தில் அங்கு மக்கள் வாழ்ந்து ,பெரிய கொள்ளை நோய் ஏற்பட்டோ,அல்லது பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்பட்டோ மக்கள் பல பகுதிகளுக்கு சிதறியிருக்கலாம் போல தெரிகிறது.உலக நாகரிகவரலாற்றில் இப்படியான சம்பவங்கள் நிறையவே நடை பெற்றிருக்கின்றன.

No comments:

Post a Comment