செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-14 ஆலாப் பறத்தல்

சேனையூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-14
ஆலாப் பறத்தல்
வட்டமாக தரையில் உட்கார்ந்து கைகளை விரித்து உள்ளங்கை நிலத்தில் பட வைத்துக் கொண்டு இருப்பர். அப்பொழுது ஒரு குழந்தை ஆலப்பற என்று கூற மற்றவர்கள் கைகளை உயர்த்திப் பிடிப்பார்கள்.
பாடல் இவ்வாறு பாடப்படும்
“ஆல பற பற
ஆலாங் குஞ்சு பற பற
கொக்கு பற பற
கொக்கு குஞ்சு பற பற
குருவி பற பற
குருவிக் குஞ்சு பற பற
கோழி பற பற
கோழிக் குஞ்சு பற பற
இவ் விளையாட்டு சிறுவர்களுக்கு பறவைகளின் பெயர்களை இலகுவாக மனப்பாடம் செய்ய உதவுவது எனக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment