செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்-2 கொக்கான் வெட்டுதல்

சேனையூரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்-2
கொக்கான் வெட்டுதல்
இது பெண்களுக்குரிய விளையாட்டு
சில வேளைகளில் ஆண்களும் விளையாடுவதுண்டு.இந்த விளையாட்டில் சில பெண்கள் தோற்காமல் விளையாடுவதை என் இளமை நாட்களில் கண்டிருக்கிறேன்.
இந்த விளையாட்டுக்கு முதியவர்கள் எதிற்பு காட்டுவர் வீடுகளில் விளையாடினால் தரித்திரம் பிடிக்கும் என கூறுவர்.
பெரும்பாலும் வீடிலிருக்கும் பெண்களுக்கான நல்ல பொழுது போக்காக இது அமைந்திருந்தது.
இன்று இந்த விளையாட்டு அருகி விட்டது என்றே சொல்லலாம்.
ஒரே வடிமான கற்களை எடுத்து, நிலத்தில் கைக்கெட்டும் தூரம் வரை வீசி ஒரு கல்லை மேலெறிந்து கீழேயுள்ள கல்லை பொறுக்கி மேலிருந்து வரும் கல்லை இத்துடன் ஏந்த வேண்டும். இதில் பலவகை உண்டு. 5,7,12,20 என ஒவ்வொரு விளையாட்டுக்கும் கற்களின் எண்ணிக்கை வேறுபடும். ஐந்து ஐந்து கல்லில் விளையாடுவதாயின் ஒரு ஆட்டம் அமைவது ஒரு கல்லை மேலெறிந்து ஒவ்வொரு கல்லையும் தனித்தனி எடுத்து ஏந்துதல் (ஓர்வி), அடுத்ததாக ஒரு தடைவ 1 கல்லும் அடுத்ததில் 3 கல்லையும் எடுத்தல் மூவீ அடுத்ததாக, மேலே எறிந்து நான்கு கல்லையும் வாரிக் கொண்டு மேற்கல்லைப் பிடித்து திரும்பவும் கல்லை எறிந்து நான்கு கல்லையும் கீழே வைத்து ஏந்தி, பின்னர் எறிந்து, வைத்த நான்கையும் வாரி மேற்கல்லை ஏந்தி ஒரு பிழையும் விடாமல் எடுத்தல் 1 ஆட்டம் வெற்றி. இதே பாங்கில் 7 கல் விளையாட்டும் உண்டு. இத்தனை கல்லைப் பொறுக்கும் போது மறுகல் அனுங்கக் கூடாது. பொறுக்கல், கொத்தல், இறாஞ்சல், சூழற்றல் எனப் பல நுட்பங்கள் உண்டு. இத்தனை கல்லைப் பொறுக்குவதற்கு எத்தனை உயரத்துக்கு கல்லை எறிய வேண்டும் எனும் மதிப்பீடு, நிலத்தில் கல்லை வீசுவதும் ஒரு கலை, நெருக்கமாக வீசினால் கல்லை அனுங்காமல் பொறுக்குவது கஷ்டம் பரந்து வீசினால் விநாடிக்குள் பொறுக்குவது இயலாது. பொறுக்கிய கற்கள் நழுவி விழும் சந்தர்ப்பமும் உண்டு. அதனால் ஆட்டம் இழப்பர். 4 பேர் ஆடலாம்.
மூளைக்குப் பயிற்சி, கண்களுக்குப் பயிற்சி, அவதான சக்தி விரிவு, கைவிரல்களுக்கு நுட்பம் தேரும் பயிற்சி, நரம்பு பயிற்சி, சிறு தொழில்களையும் லாவகமாகச் செய்யும் பயிற்சி, விரல்களுக்கு சுறுசுறுப்புப் பயிற்சி, நிதானம், உத்தேசப் பயிற்சி, மகிழ்ச்சி எனப் பலவிதமான நன்மை, கற்களின் ஓசை காதுக்கு இனிமையுங் கூட.
என் அம்மாவும் மாமி மாரும் விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன் நானும் முயற்சித்த்திருக்கிறேன் முடியவில்லை அதற்க்கு எல்லா விளையாட்டுக்களையும் போல பயிற்சி அவசியம்

No comments:

Post a Comment