செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-3 குத்து விளக்கு

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-3
குத்து விளக்கு
சேனையூரில் எல்லோரது வீடுகளிலும் காணலாம் ,வீடு குடிபோதல்,கலியாணம்,சாமத்திய சடங்கு,பொங்கல்,மடை,கலியாண ஊர்வலம் என்பனவற்றில் மங்கலப் பொருளாய் உலாவரும்.
செம்பு
செம்பிலாத வீடு இங்கில்லை எனலாம் ,வீட்டுக்கு வருபவர்களை தண்ணீர் கொடுத்து வரவேற்றல் தமிழர் மரபு.தண்ணீர் குடிப்பதற்கான ,கொடுப்பதற்கான பிரதானமான ஒன்றாக செம்பு விளங்குகின்றது.
சேருவக் கால்
சாப்பாட்டு வட்டிலை வைத்து சாப்பிடும்,வெற்றிலை தட்டம் போன்றதான பொருள் வெற்றிலைத் தட்டத்தை விட சிறிது உயர்ந்திருக்கும்.இதுவும் அனேகமான வீடுகளில் இருக்கும்.எங்கள் வீட்டில் அப்புச்சி குற்றியில் இருந்து சேருவக்காலில் சாப்பாட்டு வட்டிலில் வைத்து சாப்பிடுவார்.
குத்தி
வீட்டுக்கு வருபவர்கள் இருப்பதற்காக கொடுக்கப்படும் மரத்திலான பொருள்.துண்டு கட்டையாகவும் இருக்கும் இதற்கென செய்யப் பட்டதாகவும் இருக்கும்
புட்டுக் குழல்
எல்லோர் வீடுகளிலும் இருக்கும் இன்னோரு பொருள் இது .இதனோடு இடியப்ப உரல்,அப்பச்சட்டி.தாச்சிசட்டி,கறி காச்சும் சட்டிகளமென அடுக்களை பாத்திரங்கள் நீண்டு கொண்டே போகும்.எங்கள் ஊரில்தான் பூட்டு திருவலையயை காணலாம்.
அம்மி
அம்மி அனேகமாக வீட்டுக்கு வெளியில்தான் வைப்பார்கள் அம்மி இருக்கும் இடத்தை அம்மியடி என அழைப்பர்.
குடத்தடி
ஒவ்வோர் வீட்டு வாசலிலும் குடத்தடி இருக்கும்.குடத்தடியில் எலுமிச்சை,மாதுளை ,தோட மரங்கள் வீட்டுக்கு அழகு கூட்டி நிற்கும்.மண் குடம் ,சருவக் குடம்,அலுமனிய குடம் என்பன இங்கு புழக்கத்தில் உள்ளன.
சுளகு,கடகம்,நீத்துப் பெட்டி,குட்டான்,என இன்னும் பல பொருட்களை இணைத்து கொள்ளலாம்.
Like   Comment   

No comments:

Post a Comment