செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூர் வர்ண குல பிள்ளையார் தீர்த்தம்





சேனையூர் வர்ண குல பிள்ளையார் தீர்த்தம் 03.07.2015
கடற்கரைச்சேனை வட்டத்து கடற்கரை
முன்னொரு காலத்தில் இந்தியவிலிருந்து ஏழு காளி சிலைகள் கொண்டு வரப் பட்டதாகவும் அதில் ஒரு சிலை இங்கு இறக்கப் பட்டதாகவும் ,வட்டத்து பத்திரகாளி என அழைக்கப் பட்டதாகவும் பின்னாளில் அது திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இக் கடற்கரை முன்பு இப்பகுதிக்கான துறைமுகமாக இருந்திருக்க வேண்டும்.
சேனையூர் வர்ணகுல பிள்ளையார் கோயில் ஆடி அமவாசை தீர்த்தம் பன்னெடுங் காலமாக வட்டக் கடற்கரையிலேயே கொண்டாடப் பட்டு வருகிறது.
ஆடி அமவாசை தீர்த்த நாளில்,
முன்னய நாட்களில் இரவு நேரம் இங்கு மக்கள் கூடி திருக் கரசைப் புராணம் படிப்பதை கேட்டு ,காலையில் தீர்த்தம் ஆடுவர்.
ஆடி அமவாசை தீர்த்த ஏற்பாடுகளை அன்றய நாட்களில் ,திரு.வேலர்,திரு.கார்திகேசு,திரு.சாமித்தம்பி,திரு.பொன்னுத்துரை போன்றோர் முன்னின்று செய்தனர் பின்னய நாட்களில் திரு .திருநாவுக்கரசு திரு.நாகரட்டினம் தலைமையிலான இளைஞர்கள் சிறப்பாக செய்தனர்.
இன்று வரலாறு திரும்புகிறது ஆயிரக் கணக்கான மக்கள் கூடியிருக்கும் தீர்த்த விழா வட்டத்து கடற்கரையில்.

No comments:

Post a Comment