செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

சேனையூர் பூர்விக வரலாறு-3


சேனையூர் பூர்விக வரலாறு-3
ஆனைக் கல் குளமும் ,ஆனைக் கல் வெளியும்.
சேனையூருக்கு கிழக்கே இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ளது.
ஆனை போன்ற கல் குளத்தருகே காணப் படுவதால் ஆனக் கல் குளம் என பெயர் வந்தது.இக் குளத்தின் நடுவே பெட்டகம் போன்ற கற்கள் உள்ளன .பெட்டக வடிவ கற்களுக்குள் புதையல் இருப்பதாகவும் புதையலை எடுக்க பெரும் பலிகொடுக்க வேண்டும் என்ற கர்ண பரம்பரைக் கதைகள் ஊர்மக்களிடையே காணப்படுகின்றன.அந்த கற்கள் செதுக்கப் பட்ட அமைப்பு கொண்டது.வயல் நிலத்தை அண்டிய பகுதிகளில் இன்று மக்கள் குடியேறியுள்ளனர்.உப்பங் களியும் வயல் நிலமும் சந்திக்கின்ற அழகிய பகுதி இது.பூர்விக குடியிருப்புகள் எப்போதும் குளங்களை அண்டியே கட்டமைக்கப் படுகின்றன.அந்த வகையிலேயே ஆனைக் கல் வெளியும் சேனையூரின் பூர்விக குடியிருப்புகளில் ஒன்று.பேச்சு வழக்கில் ஆனக்கம் வெளி என்றே அழைப்பர்.

No comments:

Post a Comment