செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-6 திருகணி(திருவணி)

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-6
திருகணி(திருவணி)
பாத்திரங்கள் நிலத்தில் படாமல் இருக்க பாதுகாப்பாக பயன்படும் ஒரு பொருள்.
கயிறு.பனம் விலார்,வைக்கல்,மரம்,களிமண் ஆகியவற்றினால் செய்யப்படும்.
ஒன்றிப்பிணைந்த ஒரு பொருள் தான் திருகணை. பொதுவாக திருகணி என்று சொல்லுவார்கள். பெரும்பாலும் பனை ஈர்க்கினால் பின்னப்பட்டதாக அல்லது தும்புக் கயிற்றினால் பின்னப்பட்டதாக இருக்கும். வீடுகளில் குறிப்பாக சமையல் அறையில் சமைக்கப்பட்ட உணவுப் பாத்திரங்களை வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும். ஆரம்ப காலங்களில் விறகைப் பயன்படுத்தியே எல்லாரும் சமையல் வேலைகளைச் செய்வார்கள். இதன் போது பாத்திரத்தில் புகைக்கரி காணப்படும். நேரடியாக பாத்திரங்களை நிலத்தில் வைத்தால் வெப்பம் மற்றும் கரியால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக அந்த திருகணை பாவிக்கப்படும். பானை, சட்டி, தாச்சி, மற்றும் சமையல் உபகரணங்களை வைப்பதற்காக பாவிக்கப்படும். சமையல் பாத்திரங்களின் அடிப்பகுதி பெரும்பாலும் வளைவாகவே காணப்படும். எனவே நேரடியாக தரையில் வைக்க முடியாது. திருகணை இதற்கு ஒரு நல்ல தீர்வாக அமைந்தது.
வீடுகளில் பெரிய பானைகள் திருகணியிலேயே அடுக்கி வைக்கப் படும்.

No comments:

Post a Comment