செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரும் மண்ணின் மரபிசை பாடல்களும்-1

சேனையூரும் மண்ணின் மரபிசை பாடல்களும்-1
சேனையூர் மக்களிடையே மரபு சார் பாடல்கள் பன்னெடுங் காலமாக வழக்கில் உள்ளன
ஆக்காட்டி பாடல்
என்னுடய தகப்பனார் அடிக்கடி பாடும் பாடல் இது 
அவருக்கு கவலை வரும் நேரங்களில் இப்பாடலை கேட்கலாம்
ஆக்காட்டி ஆக்காட்டி
ஆக்காட்டி ஆக்காட்டி
எங்கே எங்கே முட்டையிட்டாய்.
கல்ல்லைத் துளைத்து கடலருகே முட்டையிட்டேன்
இட்டது நாலுமுட்டை பொரித்ததுவோ மூணுகுஞ்சு
மூத்த குஞ்சுக்கிரைதேடி மூணுமலை சுத்திவந்தேன்
இளைய குஞ்சுக்கு இரை தேடி ஏழு மலை சுத்தி வந்தேன்
பாத்திருந்த குஞ்சுக்கு பவளமலை சுத்தி வந்தேன்.
புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்னப் போகையிலே
மாயக்குறத்தி மகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்
காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க
நானழுதகண்ணீரும் என்குஞ்சழுத கண்ணீரும்
வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கன் கால்கழுவி
குண்டு நிறைந்து குதிரை குளிப்பாட்டி
இஞ்சிக்குப் பாய்ஞ்சு இலாமிச்சுக்கு வேரூண்டி
மஞ்சலுக்குப் பாய்ஞ்சு மறித்து தாம் கண்ணீரோ

No comments:

Post a Comment