செய்திகள்,வரலாறு,பண்பாடு

Friday 18 September 2015

சேனையூர் முன்னோடிகள்-11 சேனையூரின் முதல் ஆசிரியயை மனோன் அக்கா

சேனையூர் முன்னோடிகள்-11
சேனையூரின் முதல் ஆசிரியயை
மனோன் அக்கா
சேனையூர் மத்திய கல்லூரியில் நீண்ட காலம் பணியார்றியவர்.மிகச் சிறந்த ஆசிரியர்.கடமை கண்ணியம் கட்டுப்பாடு என மாணவர்கள் மீது மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்பவர்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை என மிடுக்குக்கு உதாரணமாக கொள்ளக் கூடியவர்.
ஒரு முன்னோடி ஆசிரியர் பலருக்கு முன்னுதாரணமாக தொழிற்பட்டவர்.
மிகச் சிறந்த வாசகி வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

Thursday 17 September 2015

சேனையூர் முன்னோடிகள்-10 சேனையூரின் முதல் ஆசிரியர் ஆசிரியர் திலகம் கதிர்காமத்தம்பி.சீவரத்தினம்

சேனையூர் முன்னோடிகள்-10
சேனையூரின் முதல் ஆசிரியர்
ஆசிரியர் திலகம் கதிர்காமத்தம்பி.சீவரத்தினம்
சேனையூர் கிராமத்தின் முதல் ஆசிரியர் என்ற தகுதியயை பெற்றவர்.சேனையூர் மெஹடிஸ்த மிசன் கல்லூரியில் தன் ஆரம்ப கல்வியயை கற்று பின் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையில் தன் கல்வியயை தொடர்ந்து ,சிறப்பு தேர்ச்சிகள் பெற்று ஆசிரியர் கலாசாலை சென்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற்று ஆசிரியராக முதன்மை பெற்ரவர் .
சேனையூர் மத்திய கல்லூரியின் மிக நீண்டகால ஆசிரியர் பெரிய அய்யா நடராசா அவர்களின் காலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்கு மிகுந்த பணியாற்றியவர்
நான் முன் மாதிரியாக வரித்துக் கொண்டவர்களில் இவரும் ஒருவர்.சுகாதாரப் பாடம் கற்பிப்பதில் இவருக்கு நிகராக வேறு யாரையும் குறிப்பிட முடியாது.இன்றும் அவர் படிப்பித்த அந்த பாடம் முறைமை என்னுள் அப்படியே பதிந்து போயுள்ளது.
சேனையூர் மத்திய கல்லூரியில் சாரணர் இயக்கத்தை அறிமுகப் படுத்தி அதனை உச்ச நிலைக்கு கொண்டு சென்றவர்.சாரண இயக்க செயற்பாடுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்.பின்னாளில் மாவட்ட சாரணர் சபையின் முக்கிய உறுப்பினராக அங்கம் வகித்தவர்.
திருகோணமலை பெருந்தெரு மிதடிஸ்த மிசன் பாடசாலை விகேஸ்வரா மகாவித்தியாலயமாக தரமுயர நடராசா அய்யாவுடன் இணைந்து செயல் பட்டவர் ,பின் அப்பாடசாலை அதிபராக சிறப்பாக செயல் பட்டவர்.
திருகோணமலை கோணேஸ்வரா வித்தியாலத்தை இலங்கையின் தலை சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக மாற்றிக் காட்டியவர்.
திருகோணமலை மாவட்டத்தில் சாதனை படைத்த ஒரு கல்வியாளன் இன்று நம் மத்தியில் வாழும் மிகச் சிறந்த கல்வியாளர்

சேனையூர் முன்னோடிகள்-9 பரியாரியார் காத்தமுத்து

சேனையூர் முன்னோடிகள்-9
பரியாரியார் காத்தமுத்து
அரச அங்கிகாரம் பெற்ற ஆயுள்வேத வைத்தியராக விளங்கியவர்.சிறப்பாக ஒரு துறைக்கு பேர்போனவராக இல்லாமல் பொது வைத்தியராக சிறப்பு பெற்றவர்.அரச உத்தியோகத்தர்களுக்கு வைத்திய அத்தாட்சிப் பத்திரம் கொடுக்கும் தகுதி பெற்றாராக இருந்தார்.

Friday 11 September 2015

சேனையூர்முன்னோடிகள்-8 சேர்மன் சிவபாக்கியம்

சேனையூர்முன்னோடிகள்-8
சேர்மன் சிவபாக்கியம்

பல தடவைகள் கட்டைபறிச்சான் கிராமசபையின் தலவராக கடமையாற்றியவர்.கிராமத்தின் வளர்ச்சியில் மிக்க அக்கறையுடன் செயல் பட்டவர்.மழை காலங்களில் வடிகால் அமைப்புசேனையூர் மத்திய கல்லூரியின் வளர்ச்சியில் பங்கேற்பு என அவர் சேவை விரிந்தது.5ம் வட்டாரத்தின் நிரந்தர உறுப்பினராக பதவி வகித்தவர்.

Wednesday 9 September 2015

சேனையூர் முன்னோடிகள்-7 பரியாரியார் கனகரத்தினம்



சேனையூர் முன்னோடிகள்-7
பரியாரியார் கனகரத்தினம்
சேனையூரில் சித்த வைத்தியம் மிகப் பிரபலமானது ஒவ்வொரு வைத்தியரும் ஒவ்வொரு துறைக்கும் பேர் போனவர்கள்.வாத நோய் தொடர்பான வைத்தியத்தில் இவர் சிறப்பிடம் பெறுகிறார்.அத்தொடு அந்த நாட்களில் பிள்ளை பிறப்பு அதனை தொடர்ந்து கொடுக்கும் தூள் மருந்து காய்ச்சலுக்கான மருந்துகள் என பொதுவான வைத்தியத்திலும் புகழ் பெற்றவர் மூதூர் பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்து வைத்தியம் பார்த்து செல்வர்.
இவர் ஊஞ்சல் பாடல்கள் இயற்றுவதிலும் வல்லவர்.என் அம்மம்மாவின் தங்கையின் கணவர்.

Tuesday 8 September 2015

சேனையூர் முன்னோடிகள்-6 கண் வைத்தியர் பத்தினியர்

சேனையூர் முன்னோடிகள்-6
கண் வைத்தியர் பத்தினியர்
கண் வருத்தத்திற்கு சித்த வைதிய முறையின் மூலம் இவர் தயாரிக்கும் குளிசை மருந்து மூலம் குணமாக்குவார்.அவர் கொடுக்கின்ற குளிசையயை உரைத்து கண்ணுக்குள் விட்டால் கண் வருத்தம் குணமாகும்.
சேனையூர் நாகதம்பிரான் ஆலயத்துக்கு பக்கத்தில் இவர் வீடு அமைந்திருந்தது அவருடய மனைவி வள்ளியாத்தையும் இணைந்து வைத்தியத் தொளிலை செய்தனர்.
கண் வைத்தியம் மாத்திரமல்ல வேறு சிறு நோய்களுக்கும் இவர் வைத்தியம் பயன் பட்டது.நான் அவரை பத்தினி பெத்தப்பா என அழைப்பேன்.

Monday 7 September 2015

சேனையூர் முன்னோடிகள் -5 வைத்தியர் புலவர் பத்தினியர்

சேனையூர் முன்னோடிகள் -5
   வைத்தியர் புலவர் பத்தினியர்

 அரச அங்கிகாரம் பெற்ற சித்த மருத்துவர்.வாகட நூல்களை கற்று தேறியவர்.நிகண்டு போன்ற இலக்கண நூல்களில் தேர்ச்சி பெற்றவர்.இயல்பாக செய்யுள் இயர்ருவதில் வல்லவர்.எழுத்தானி கொண்டு ஏடுகளில் தன் படைப்புகளை எழுதி வைத்திருந்தார்.ஆனால் அவை கால வெள்ளத்தில் கரைந்து போயின.தொடர்ச்சியாக வந்த வன் செயல்கள் அவற்றை அழித்து விட்டன.அவர் வீட்டில் பல ஏடுகள் பூட்டி வைக்கப் பட்டிருந்ததை நான் கண்டிருக்கிறேன்.

என் நண்பன் நவரத்தினத்தின் நெருங்கிய உறவினர்.அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தாலும் அவர் அருமை புரியவில்லை.நிறய நான் அவரோடு பேசியிருக்கிறேன்.அடிக்கடி நிகண்டு பற்றியே எங்களிடம் பேசுவார் அப்போது எங்களுக்கு விளங்கவில்லை.பின்னாலில் அவர் இறப்பிற்கு பிறகுதான் காலம் கடந்து விளங்கிக் கொண்டோம்.

அகட விகடமாக பேசுவார்.இலகுவில் சிரிக்க மாட்டார்.

Sunday 6 September 2015

சேனையூர் முன்னோடிகள்-4 நடராஜா உடையார்

சேனையூர் முன்னோடிகள்-4
நடராஜா உடையார்
கொட்டியாரப் பிரதேசத்தில் உடையார் முறை ஒழிக்கப் படும் வரை உடையாராக பணியாற்றியவர்.
சேனையூருக்கும் வல்வெட்டித்துறைக்கும் பல நூறு ஆண்டுகள் வியாபாரத் தொடர்பு இருந்து வந்தது.வத்தைகள் வியாபார ரீதியாக செயல் பட்ட காலம்.சேனையூரிலிருந்து நெல் யாழ்ப்பாணத்திற்கு வியாபர ரீதியாக கொண்டு செல்லப் பட்டது.இதனால் சேனையூர்க்கும் வல்வெட்டிதுறைக்கும் இடையில் திருமண உறவுகளும் ஏற்பட்டன.
உடையார் அவர்கள் வல்வெட்டிதுறையயை பிறப்பிடமாக கொண்டாலும் சேனையூரிலேயே வாழ்ந்து சமூக அர்ப்பணிப்புடன் செயல் பட்டவர்.
சேனையூர் மத்திய கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவர்.விளையாட்டு சமய சமூக சேவகளில் முன்னின்று உழைத்தவர்.
அவரை எனக்கு நன்றாக தெரியும் மிகவும் அழகாக இருப்பார் வெள்ளையும் சொள்ளையுமான ஒருவர்.வெள்ளிகிழமைகளில்
சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோயிலில் நடக்கும் கூட்டுப் பிரார்த்தனைக்கு தன் ஆர்மோனியப் பெட்டியுடன் வருவார்.கழுத்தில் எப்போதும் ஒரு பெரிய கூடும் சங்கிலியும் தொன்ங்கிக் கொண்டிருக்கும். ஆர்மோனியத்தை வாசித்துக் கொண்டு ''பூவா மலர் கொண்டணிவார்''என்ற தேவாரத்தை பாடுவது இப்போதும் என் நினைவில்.
சேனையூரில் மாத்திரமல்ல கொட்டியார பிரதேசம் முழுவதும் அவர் புகழ் பெற்ற ஒருவராக இருந்தார்.

சேனையூர் முன்னோடிகள்-3 பல்துறை விற்பன்னர்.காளியப்பு.விஜயசிங்கம்

சேனையூர் முன்னோடிகள்-3
பல்துறை விற்பன்னர்.காளியப்பு.விஜயசிங்கம்
விஜயசிங்கம் என பெயர் இருந்தாலும் விஸ்வலிங்க பரியாரியார்,பூசாரியார் என்ற பெயரிலேயே பெரும் பாலும் அறியப் பட்டவர் அழைக்கப்பட்டவர்
வித்தகர் காளியப்புவின் மூத்த புதல்வர்.அவரைப் போலவே வைத்தியராகவும் பூசாரியாகவும் அறியப் பட்டவர்.வைத்திய தொழிலில் அவர் இறக்கும் வரை புகழோடு விளங்கியவர்.தமிழ் வைத்தியமுறையின் எல்லா நுணுக்கங்களையும் கற்றறிந்தவர்.அவரிடம் வைத்தியம் பார்க்க பல ஊர்களிலிருந்தும் ஆட்கள் ஒரு வத்திய சாலைக்கு வந்து போவது போல செல்வர்.
மந்திரம் கைவந்த வல்லாளன் எல்லா வகையான மந்திரங்களும் அவர் நாவில் நடனமிடும்.மலயாள மந்திரம் ,சிங்கள மந்திரம் தமிழ் மந்திரம் ,சமஸ்கிருத மந்திரம் அதன் தன்மைக்கேற்ப ஏற்ற இறக்கங்களுடன் உச்சரித்து அந்த மந்திரங்களுக்கே அழகு சேர்தவர்.
கும்ப நிகழ்வு வீரபத்திரன் வேள்வி ஆகியவற்றில் எதிர் மந்திரவாதிகள் மந்திரத்தால் கட்டு முறைகளை பயன் படுத்தினால் அதனை வெகு இலகுவாக வெட்டி தன் மந்திர வித்தையால் முறியடிக்கும் திறனே ஒரு தனியழகு.
புலமைத் தன்மை வாய்த்தவர் இறக்கும் வரை ஏட்டிலேயே எழுதி வந்தவர் ஓய்வாயிருக்கும் போது எப்போதும் அவர் கையில் எழுத்தாணியிருக்கும் .எழுதுவதற்க்கான பனையோலையயை தானே தயார் செய்வார் .அதை அவித்து பதனப் படுத்துவார் ,நான் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன்.
எழுந்த மானத்தில் செய்யுள் இயற்ற வல்லவர்.தமிழ் யாப்பு வகைகளை முறையாக கற்றவர்.தொல்காப்பியம் நிகண்டு எல்லாம் கற்று தேறியவர்.
சம்புக்களி பத்தினியம்மன் காவியம்,சம்பூர் பத்திரகாலியம்மன் காவியம் என்பன 60களில் நூலாக வெளிவந்தன அதன் பிரதிகள் 90வன்செயலில் காணமல் போயின.இன்னும் நிறயவே அவர் ஏடுகளில் எழுதி வைத்திருந்தார்.அவர் வீட்டில் ஒரு அலுமாரி முழுவதுமே ஏடுகளால் நிறைந்திருந்தன.பழய ஏடுகள் அவர் எழுதியவை என பல வகைப்படும்
புராணங்களுக்கு பயன் சொல்லும் திறன் வாய்ந்தவர்.சேனையூர் வர்ணகுல வினாயகர் ஆலயத்தில் நடைபெறும் கந்த புராணபடிப்பு,திருக்கரசையில் நடைபெறும் திருக்கரசை புராணபடிப்பு ஆகியவற்றில் அவர் ஆற்றலை கண்டு வியந்திருக்கிறேன்.
சம்புக் களி பத்தினியம்மன் கோயிலில் அவர் கண்ணகி குளிர்த்தி பாடும் இச என் காதுகளில் இன்றும் ஒலிக்கிறது இனிமையான அசைவுகளுடன் அவர் குரல் ஒலிக்கும் .நான் மட்டக்களப்பு அம்பாறை என பல இடங்களிலும் கண்ணகி கோயில்களில், கண்ணகி குளுர்த்தி பாடுவதை கேட்டிருக்கிறேன் அவர்போல் பாடுவோரை நான் கண்டதில்லை.
பின்னாளில் நாங்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கண்ணகி குளுர்த்தியயை அளிக்கை செய்த போது அவர் பாணியயையே பின் பற்றினோம்

Friday 4 September 2015

சேனையூர் முன்னோடிகள் 2 -வித்தகர்.விஜயசிங்கம்.காளியப்பு

வித்தகர்.விஜயசிங்கம்.காளியப்பு
கொட்டியார பிரதேசம் எங்கும் தன் வைத்திய திறனால் புகழ் பெற்ற ஒரு பல்துறை வித்தகராக விளங்கியவர்.வைத்தியர்,பூசாரி,புலவர் என பன்மைத் திறன் வாய்த்தவர்.
கூனித்தீவு தொடக்கம் ஈச்சிலம் பற்று வரை தன் வைத்திய சேவையயை அர்ப்பணிப்புடன் செய்தவர்.இன்று வரை அங்குள்ள முதியவர்கள் அவரை தங்கள் நினைவில் வைத்திருக்கின்றனர்.
கண் வைத்தியத்தில் அவருக்கு நிகர் அவரே.இன்று கண் பூளை அல்லது கற்றாக் போன்ற கண் நோய்களுக்கு எந்தவித சத்திர சிகிச்சையும் இல்லாமல் தன் மருந்தால் மிக இலகுவாக மாற்றக் கூடியவர்.அவர் இறந்த பிறகும் கூட அவர் தயாரித்த மருந்து பல வருசங்கள் பலருக்கு பயன் பட்டது.
திருகோணமலையின் தனித்துவமான கும்ப நிகழ்வை சேனையூரில் அறிமுகப் படுத்தியவர்.
சேனையூர் வீரபத்திரன் வேள்வி,சேனையூர் சம்புக் களி பத்தினியம்மன் ,ஆரம்ப காலங்களில் கட்டைபறிச்சான் அம்மச்சியம்மன் ஆகிய ஆலயங்களில் வருடாந்தம் நடை பெறும் சடங்குகளை முன்னிறு நடத்தும் பூசகராக தொழிற்பட்டவர்.
சேனையூர் கிராமத்தில் மாத்திரமல்ல சுற்றரவரவுள்ள கிராமங்களில் நடபெறும் சடங்குகளிலும் முன்னிலைபடுத்தப் பட்டவர்.
குறிப்பாக கும்ப சடங்கை சிறப்பாக நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே.
Like   Comment   

Thursday 3 September 2015

சேனையூரின் முன்னோடிகள்1 சேர்மன்.கணபதிப்பிள்ளை

சேர்மன்.கணபதிப்பிள்ளை
  கட்டைபறிச்சான் கிராமசபையின் நீண்டகாலம் தலைவராக கடமையாற்றியவர்.சேனையூர் கிராமமுன்னேற்ற சங்கத்தின் ஆரம்பகால தலைவர்.எப்போதும் அவர் வேட்டியும் பாலாமணி சட்டையுடனுமே காணப்படுவார்.சேனையூர் கிராமத்தின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல் பட்டவர்.ஒரு கிராம சபையால் என்னவெல்லாம் ஒரு கிராமத்திற்கு செய்ய முடியுமோ அவையெல்லாவற்றையும் பெற்றுக் கொடுத்தவர்.சிறு வீதிகள் ,போக்குகுகள் ,வடிகால்கள்,கேணிகள் என அவர் பணிகள் சிறப்பாக இருந்தன..1957ல் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்ட போதும்  மிகப் பெரிய மழை காலங்களிலும் தன்னலம் பாராது கடமையாற்றுவார் என இங்குள்ள பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.கல்வி  விளையாட்டு,சமுக சமய அபிவிருத்தியில் இவர் மிகுந்த கவனம் செலுத்தியவர்.அவர் இறக்கும்வரை சேர்மன் என்ற அடைமொழி அவருடனேயே இருந்த்தது.பின்னாளில் அவர் சேர்மனாக இல்லாத காலங்களிலும் அவரை எல்லொரும் சேர்மன் எனவே அழைப்பர்.சேனையூரில் மிகப் பழமையான குடும்பங்களில் இவருடய குடும்பமும் ஒன்று.எங்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக செயல் பட்ட ஒரு மிகப் பெரிய ஆளுமை.