செய்திகள்,வரலாறு,பண்பாடு

Friday 14 August 2015

சேனையூர் வரலாறு-15

சேனையூர் வரலாறு-15
ஒல்லாந்தர் காலமும் சேனையூரும்
ஒல்லாந்தர் 1656ல் இலங்கையயை கைப்பற்றுகின்றன்ர் 1795 வரை ஆட்சி செலுத்துகின்றனர்.திருகோணமலையும் அவர்கள் வசமாகிறது.ஆரம்பத்தில் வர்த்தக நோக்கில் வந்த அவர்கள் பின்னய நாட்களில் கட்டாய மத மாற்றங்களில் ஈடு பட்டதற்கான சான்றுகள் கிராமங்களில் நிலவும் கதைகளின் மூலம் அறிய முடிகிறது.
சேனையூர் கிராமத்திற்கு வந்த ஒல்லாந்தர் பலரை கட்டாய மத மாற்றத்திற்கு உட்படுத்தி அவர்களது பெயர்களை மாற்றியுள்ளனர்.மத மாற்றம் செய்த போது மொட்டையடித்து குரிசில் மாலை அணிவித்ததாக கதைகள் உண்டு. ஆனாலும் பின் நாளில் அது நிலைக்கவில்லை அது பெயரளவிலான மத மாற்றமாகவே நிகழ்ந்துள்ளது.பிலிப்பர்,கொந்தாஸ்து என அவர்களுக்கு சூட்டப் பட்ட பெயர்கள் பின்னாளில் பட்டப் பெயர்களாக உலவியதாக பெரியவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.கொட்டியாரப் பகுதியில் ஒல்லாந்தரது கோட்டையொன்று இருந்ததாக சில தகவல்கள் கூறுகின்றன.van senden enum ஒல்லாந்த அதிகாரியின் நாட் குறிப்புகளில் கொட்டியாரம் பற்றிய குறிப்புகள் இப் பிரதேசத்த்தில் தமிழர் இருப்பை உறுதிப் படுத்துகிறது.

No comments:

Post a Comment