செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-4 பெட்டகம்

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-4
பெட்டகம்
பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்க்காக வசதி படைத்தவர்களின் வீடுகளில் இதன் பயன் பாடு அதிகம்.முக்கியமான பொருட்களை இதனுள் பூட்டி வைப்பர்.சேனையூரில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.எங்கள் பெரிய அய்யா வீட்டில் பழய ஏடுகள் பெட்டகத்திலேயே இருந்தன.சேனையூர் வர்ண குல பிள்ளையார் கோயிலிலும் இரண்டு பெட்டகங்கள் இருந்தன.அழகான வேலைப்பாடுகளுடன் இது காணப்படும்.
கொத்து
தமிழர்களின் பன்னெடுங் காலம் பயன்படுத்தும்
பொருட்களை அளப்பதற்க்கான ஒரு அளவைக் கருவி.நெல் அரிசி, பால் என்பன அளவீடு செய்யப் படும்.மரத்த்திலான கொத்துக்களை நான் பார்த்திருக்கிறேன்.சேனையூரில் எருமைப்பால் காலம் காலமாக கொத்தினாலேயே அளக்கப்பட்டது.வெண்கலத்திலான கொத்தினாலேயே அரிசி அளக்கும் முறையிருந்தது.
நாழி
நெல்லை அளவிடுவது.இது பிரம்பினால் அல்லது பனையோலையால் செய்யப் பட்டதாக இருக்கும்.நாழி பற்றி பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் இப்படி கூறுகிறது
''தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்''
தானியத்தை நாள் தோறும் அளவ்விட்டு உண்னும் முறை கூறப் பட்டுள்ளது.
புறநானூறு
''தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிறழ்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பது இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயன் ஈதலே;
துய்பேம் எனினே, தப்பு ந பலவே''
என நாழி பற்றி புறநானூறூ கூறுகிறது.
புசல்
28கொத்து ஒரு புசல் இதுமரத்திலானதாக இருக்கும்

No comments:

Post a Comment