செய்திகள்,வரலாறு,பண்பாடு

Saturday 15 August 2015

சேனையூரும் சடங்குகளும்-1

சேனையூரும் சடங்குகளும்-1
வீரபத்திரர் வேள்வி(மடை,சடங்கு)


கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் இத்தகய நிகழ்வுக்ள் சடங்கு என அழைக்கப் படுவது மரபு.தொல்காப்பியத்தில் வேட்டல் பற்றிய குறிப்புகள் உள்ளன.யாகம் என்கிற சம்ஸ்கிருத சொல்லின் தமிழ் வடிவம் எனவும் கொள்ளலாம்.ஆங்கிலத்தில் (ritual)என பொருள் கொள்ளப் படுகிறது.அதே வேளை மடை என்கிற சொல் இப் பிரதேசத்த்தின் தனித்துவமான சொல்.வீரபத்திரர் வேள்வி பரிகல வேள்வி என அழைக்கப் படுகிறது.பரிகலம் என்பது அமானுஸ்ய சக்திகளை குறிக்கும்.ஊரில் நோய் துன்பம் வராது நல்ல மழை பெய்து வளம் வேண்டி இந்த வேள்வி சடங்கு செய்யப் படுகிறது.அமானுஸ்ய சக்திகளை கட்டுப் படுத்தி நோய் துன்பம் வராமல் பதுகாப்பதாக நம்பிக்கை இந்த மக்களிடம் நிலவுகிறது.
சேனையூரின் வரலாற்று சான்றுகளில் ஒன்றான இவ் ஆலயத்தை சூழ உள்ள பகுதியும் இச் சடங்கும் இவ் மக்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று.

No comments:

Post a Comment