செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரும் மாட்டு வண்டிலும்

சேனையூரும் மாட்டு வண்டிலும்
சேனையூரில் மாட்டு வண்டிலின் பயன்பாடு இன்றுவரை உயிர்ப்புளதாகவே உள்ளது.அன்றய நாட்களில் அனேகமாக எல்லோர் வீடுகளிலும் நாம் வண்டில் மாடுகளை பார்க்கலாம்.மாட்டுமால் அதனோடிணைந்த வைக்கல் போர்.எத்தனை அழகு.
2006ம் ஆண்டு ஏற்பட்ட இடப் பெயர்வு பலரது வண்டில் மாடுகளை காவுகொண்டு விட்டது.மீண்டும் தற்போது அதனை படிப்படியாக மீளுருவாக்கியிருக்கிறார்கள்.வண்டில் மாடுகளே விவசாயத்துக்கான ஆதாரமாக பெரிதும் பயன் பட்டன.
முன்னய நாட்களில் தூரப் பயணங்களுக்கு வண்டில் மாடே பெரிதும் பயன் பட்டது.மூதூருக்கு தோப்பூருக்கு படம் பார்க்க செல்வது வண்டில் மாட்டிலேயே.இரவு நேரம் மூக்கணைக்கு நடுவே அரிக்கன் லாம்பு கட்டி செல்லும் பயணம் அலாதியானது.
வண்டில் செய்கின்ற போது ஒவொன்றுக்கும் ஒவ்வொரு வகை மரத்தின் பயன்பாடு. நடுப் பாருக்கு சமுள மரம்.மூக்கணைக்கு விண்ணங்கு,சிலாகைகளுக்கு குயில மரம்,அச்சுக்கு முதிரமரம்,பக்கப் பார்களுக்கும் இலகுவான பாரம் குறைந்த மரங்கள் என தெரிவு செய்வர்.
சேனையூர் வண்டில்களுக்கு தூரப் பயணங்களுக்காக கூடாரம் அமைக்கப் படும் அது அழகான சிறிய வீடுபோல இருக்கும்.அவ்வளவு அழகான அதன் வடிவமைப்பு.
Like   Comment   

No comments:

Post a Comment