செய்திகள்,வரலாறு,பண்பாடு

Friday 14 August 2015

சேனையூர் வ்ரலாறு-17

சேனையூர் வ்ரலாறு-17
விதானை முறையும் சேனையூரும்
மன்னர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் ,கிராமத் தலைவர்கள் மூலம் உள்ளூர் நிர்வாகம் நடை பெற்றது.பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1833ல் உருவாக்கப் பட்ட கோல்புறுக் அரசியல் சீர்த்திருத்தம் கிராம நிர்வாக முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது.கிராமங்கள் தோறும் பொலிஸ் விதானைமார் நியமிக்கப் பட்டனர்.இந்த அடிப்படயிலேயே மருதடிச்சேனையூர் பொலிஸ்விதான் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.1963ல் பொலிஸ் விதான் முறை ஒழிக்கப் படும் வரை இந்த முறையே தொடர்ந்தது.கடைசி பொலிஸ் விதானையாராக கடமையாற்றியவர் என் நெருங்கிய உறவினர் மாமா முறையான திரு.சிவபாக்கியம்.அவர்கள்.அவர்கள் வீட்டில் பொலிஸ் விதான் பெயர்ப் பலகை 80கள் வரை காட்சிப் படுத்தப் பட்டிருந்ததை நானறிவேன்.

No comments:

Post a Comment