செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 6 September 2015

சேனையூர் முன்னோடிகள்-4 நடராஜா உடையார்

சேனையூர் முன்னோடிகள்-4
நடராஜா உடையார்
கொட்டியாரப் பிரதேசத்தில் உடையார் முறை ஒழிக்கப் படும் வரை உடையாராக பணியாற்றியவர்.
சேனையூருக்கும் வல்வெட்டித்துறைக்கும் பல நூறு ஆண்டுகள் வியாபாரத் தொடர்பு இருந்து வந்தது.வத்தைகள் வியாபார ரீதியாக செயல் பட்ட காலம்.சேனையூரிலிருந்து நெல் யாழ்ப்பாணத்திற்கு வியாபர ரீதியாக கொண்டு செல்லப் பட்டது.இதனால் சேனையூர்க்கும் வல்வெட்டிதுறைக்கும் இடையில் திருமண உறவுகளும் ஏற்பட்டன.
உடையார் அவர்கள் வல்வெட்டிதுறையயை பிறப்பிடமாக கொண்டாலும் சேனையூரிலேயே வாழ்ந்து சமூக அர்ப்பணிப்புடன் செயல் பட்டவர்.
சேனையூர் மத்திய கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவர்.விளையாட்டு சமய சமூக சேவகளில் முன்னின்று உழைத்தவர்.
அவரை எனக்கு நன்றாக தெரியும் மிகவும் அழகாக இருப்பார் வெள்ளையும் சொள்ளையுமான ஒருவர்.வெள்ளிகிழமைகளில்
சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோயிலில் நடக்கும் கூட்டுப் பிரார்த்தனைக்கு தன் ஆர்மோனியப் பெட்டியுடன் வருவார்.கழுத்தில் எப்போதும் ஒரு பெரிய கூடும் சங்கிலியும் தொன்ங்கிக் கொண்டிருக்கும். ஆர்மோனியத்தை வாசித்துக் கொண்டு ''பூவா மலர் கொண்டணிவார்''என்ற தேவாரத்தை பாடுவது இப்போதும் என் நினைவில்.
சேனையூரில் மாத்திரமல்ல கொட்டியார பிரதேசம் முழுவதும் அவர் புகழ் பெற்ற ஒருவராக இருந்தார்.

No comments:

Post a Comment