செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 6 September 2015

சேனையூர் முன்னோடிகள்-3 பல்துறை விற்பன்னர்.காளியப்பு.விஜயசிங்கம்

சேனையூர் முன்னோடிகள்-3
பல்துறை விற்பன்னர்.காளியப்பு.விஜயசிங்கம்
விஜயசிங்கம் என பெயர் இருந்தாலும் விஸ்வலிங்க பரியாரியார்,பூசாரியார் என்ற பெயரிலேயே பெரும் பாலும் அறியப் பட்டவர் அழைக்கப்பட்டவர்
வித்தகர் காளியப்புவின் மூத்த புதல்வர்.அவரைப் போலவே வைத்தியராகவும் பூசாரியாகவும் அறியப் பட்டவர்.வைத்திய தொழிலில் அவர் இறக்கும் வரை புகழோடு விளங்கியவர்.தமிழ் வைத்தியமுறையின் எல்லா நுணுக்கங்களையும் கற்றறிந்தவர்.அவரிடம் வைத்தியம் பார்க்க பல ஊர்களிலிருந்தும் ஆட்கள் ஒரு வத்திய சாலைக்கு வந்து போவது போல செல்வர்.
மந்திரம் கைவந்த வல்லாளன் எல்லா வகையான மந்திரங்களும் அவர் நாவில் நடனமிடும்.மலயாள மந்திரம் ,சிங்கள மந்திரம் தமிழ் மந்திரம் ,சமஸ்கிருத மந்திரம் அதன் தன்மைக்கேற்ப ஏற்ற இறக்கங்களுடன் உச்சரித்து அந்த மந்திரங்களுக்கே அழகு சேர்தவர்.
கும்ப நிகழ்வு வீரபத்திரன் வேள்வி ஆகியவற்றில் எதிர் மந்திரவாதிகள் மந்திரத்தால் கட்டு முறைகளை பயன் படுத்தினால் அதனை வெகு இலகுவாக வெட்டி தன் மந்திர வித்தையால் முறியடிக்கும் திறனே ஒரு தனியழகு.
புலமைத் தன்மை வாய்த்தவர் இறக்கும் வரை ஏட்டிலேயே எழுதி வந்தவர் ஓய்வாயிருக்கும் போது எப்போதும் அவர் கையில் எழுத்தாணியிருக்கும் .எழுதுவதற்க்கான பனையோலையயை தானே தயார் செய்வார் .அதை அவித்து பதனப் படுத்துவார் ,நான் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன்.
எழுந்த மானத்தில் செய்யுள் இயற்ற வல்லவர்.தமிழ் யாப்பு வகைகளை முறையாக கற்றவர்.தொல்காப்பியம் நிகண்டு எல்லாம் கற்று தேறியவர்.
சம்புக்களி பத்தினியம்மன் காவியம்,சம்பூர் பத்திரகாலியம்மன் காவியம் என்பன 60களில் நூலாக வெளிவந்தன அதன் பிரதிகள் 90வன்செயலில் காணமல் போயின.இன்னும் நிறயவே அவர் ஏடுகளில் எழுதி வைத்திருந்தார்.அவர் வீட்டில் ஒரு அலுமாரி முழுவதுமே ஏடுகளால் நிறைந்திருந்தன.பழய ஏடுகள் அவர் எழுதியவை என பல வகைப்படும்
புராணங்களுக்கு பயன் சொல்லும் திறன் வாய்ந்தவர்.சேனையூர் வர்ணகுல வினாயகர் ஆலயத்தில் நடைபெறும் கந்த புராணபடிப்பு,திருக்கரசையில் நடைபெறும் திருக்கரசை புராணபடிப்பு ஆகியவற்றில் அவர் ஆற்றலை கண்டு வியந்திருக்கிறேன்.
சம்புக் களி பத்தினியம்மன் கோயிலில் அவர் கண்ணகி குளிர்த்தி பாடும் இச என் காதுகளில் இன்றும் ஒலிக்கிறது இனிமையான அசைவுகளுடன் அவர் குரல் ஒலிக்கும் .நான் மட்டக்களப்பு அம்பாறை என பல இடங்களிலும் கண்ணகி கோயில்களில், கண்ணகி குளுர்த்தி பாடுவதை கேட்டிருக்கிறேன் அவர்போல் பாடுவோரை நான் கண்டதில்லை.
பின்னாளில் நாங்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கண்ணகி குளுர்த்தியயை அளிக்கை செய்த போது அவர் பாணியயையே பின் பற்றினோம்

No comments:

Post a Comment